12.23.2005

பா.ஜ.க.வின் நேர்மை

ஒழுக்கம், நேர்மை, தேசப்பற்று இவற்றில் மற்ற கட்சியினரைவிட உயர்ந்த நிலையில் இருப்பதாக பெரும்பாலான (ஆதிக்க சாதியினரின்) பத்திரிக்கைகளும், பல்கலைவித்தகர்களாலும் சொல்லப்பட்டு நம்பவைக்கப்பட்ட பா.ஜ.க.வின் நிலை இப்போது சந்தி சிரிக்கிறது.

மக்கள் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் பேசுவதற்கு இலஞ்சம் வாங்கியதாக ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் உட்பட 11பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டுவிட்டது. குற்றவாளிகளின் பதவியை பறிக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் விசாரனைக்குழு மக்களவையில் சமர்ப்பித்தது. மக்களவை அவர்களின் பதவியைப் பறித்துள்ளது.

குற்றம் செய்த அரசியல்வாதிகள், முதல் முறையாக குற்றச்சாட்டு எழுந்த மிகக்குறுகிய காலத்தில் தண்டிக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் ஊழல் குறைய வாய்ப்பு உண்டு.

ஆனால், தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக மார்தட்டிக் கொள்ளும் பா.ஜ.க. இதனை எதிர்க்கிறது. காரணம் அதிக ஊழல்வாதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியல்லவா? (ஒருவேளை இலஞ்சம் வாங்குவது தேசப்பற்றின் அடையாளமோ?)

இந்த அயோக்கியர்கள் கூறுகிறார்கள்.... 'குற்றம் செய்தவரை தண்டிக்க வேண்டும்தான். ஆனால் அதற்கு வரைமுறை வேண்டும்...'

குற்றவாளி என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் அவர்களை தண்டிக்க வரைமுறை வேண்டுமாம். தேசத்தந்தையை கொன்ற கும்பல்களிலிருந்து வந்தவர்கள்தானே... இதற்கு மேலும் பேசுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்கலைவித்தகர்களும் எழுதுவார்கள்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக 11 குற்றவாளி உறுப்பினர்களை உடனடியாக தன்டித்த காங்கிரசு அரசுக்கும் மக்களவையை திறம்பட நடத்திச் செல்லும் சோம்நாத் சட்டர்ஜி அவர்களுக்கும் இந்தியக் குடிமகனாக இருந்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

12.06.2005

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில்...

டிசம்பர் 6 - ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள் - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள். ஆனால் அந்த நாளைக் கொச்சைப்படுத்தியவர்கள் சங்பரிவார்க் கும்பலும், பாரதீய ஜனதாவும் அந்த நாளினைத் தேர்ந்தெடுத்துத்தான் அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்துத் தூள் தூளாக்கினர் (1992).

அம்பேத்கர் அவர்கள் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு பல லட்சம் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுடன் புத்த மார்க்கத்தைத் தழுவினார். அந்த ஆத்திரத்தையும் மனதிற் கொண்டு, மாற்று மதத்தினரின் வழிபாடு இடத்தை வன்முறையால் அடித்து நொறுக்கினர். இந்த யோக்கியதையில் இந்தக் கூட்டம் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுவதும் - இவர்களின் ரத யாத்திரை வாகனத்தில் அம்பேத்கர் படத்தை மாட்டி வைப்பதும் எத்தனைப் பெரிய பித்தலாட்டமும் வஞ்சகமும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

``மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன. இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கிற விடயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அம் முடிவு என்னவென்றால், `நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்!’ நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களின் சம்பந்தத்தை நாம் விலக்கிக் கொள்ள வேண்டும். நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படிக் கொடுமைப்படுத்த அவர்களுக்குத் துணிவு வந்திருக்குமா? எந்த மதத்தினர் உங்களுக்குச் சம அந்தஸ்துக் கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ, அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள். பிறக்கும் போதோ நான் தீண்டப்படத்தகாதவனாய்ப் பிறந்தேன்; என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல. ஆனால், இறக்கும்போது தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையி லேயே இருக்கிறது. அதாவது நான் இந்துவாய் இறக்க மாட்டேன்’’ என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கர்
(நாசிக்கில் கூடிய பம்பாய் மாநில ஆதி இந்துக்கள் மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து - `குடிஅரசு’ 20-10-1935).

சம அந்தஸ்து கொடுக்கும் பிற மதத்துக்குச் செல்லுங்கள் என்ற வேண்டுகோளை வைத்தார் அண்ணல். புத்த மார்க்கம் தழுவினர். இஸ்லா முக்கும் சென்றனர் வேறு சிலர்.

அந்த ஆத்திரத்தில் ஒரு கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தியதுபோல அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளைத் தெரிவு செய்து அந்த நாளில் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்கினர் என்பதைக் கவனிக்கத் தவறிடக் கூடாது.

பாபர் மசூதி இடிப்பு என்பது ஏதோ இஸ்லாமியர்களின் பிரச்சினை அல்ல. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, இழி பிறவிகளாக ஆக்கப்பட்டார்களே அவர்கள் அத்தனைப் பேர்களின் பிரச்சினையும் ஆகும். 13 ஆண்டு காலமாக நியாயம் கிடைக்கவில்லை. குற்றவாளிகள் பெரிய மனிதர்களாக ராஜ நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இம் மாபெரும் குற்றத்தைச் செய்தவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்துக் கொள்வார்களேயானால், சட்டத்தை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ணம் பாமர மக்களுக்கும் ஏற்பட்டு விடும் - எச்சரிக்கை!!

நன்றி: விடுதலை