7.31.2005

தெரிந்த கதை தெரியாத புராணம்-1

'....இந்த தீய வினை உன்னிடத்தில் இருந்து ஒழிய வேண்டுமானால் மீண்டும் நீ மண்ணுலகத்திற்கு சென்று வா. அங்கு நீ தவம் புரிந்த இடத்திற்கு அருகில் உள்ள குளத்தில் உனது பருத்த பிண உடல் மிதந்து கொண்டிருக்கும். அதனை நீ தின்று முடித்தால் உன் பசி நோய் தீர்ந்து விடும்' என்று நான்முகம் கூறினான்.
நான்முகம் கூறியபடியே அவனும் மண்ணுலகத்தை அடைந்து நன்கு பருக்க வைக்கப்பட்டிருந்த தனது உடலைத் தின்றான். இதனால் தர்மம் செய்யாத தீவினையில் இருந்து அவன் நீங்கினான்.
http://www.dailythanthi.com/muthucharam/Home/second_page.asp?secid=10&artid=2041&issuedate=7/30/2005

சந்திரமுகி திரைப்படத்தை 102 முறை பார்த்து சாதனை!!

கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளத்தைச் சேர்ந்த முத்து என்பவர் காய்கறி கடையில் பணிபுரிந்து வருகிறார். சந்திரமுகி வெளியான ஏப்ரல் 14ம் தேதி முதல் கோவை ராம் நகரிலுள்ள குமரன் திரையரங்கில் தினமும் படத்தை பார்த்து வந்துள்ளார்.

முதல் 50 நாட்களுக்கு தனது சொந்த செலவிலேயே பார்த்த இவரின் பக்தியைக் கண்டு, தியேட்டர் நிர்வாகம் இனி இப்படம் ஓடும் நாள்வரை இலவசமாகவே பார்க்கலாம் என்று அனுமதியளித்தது. இதனையடுத்து 102 நாட்களும் இவர் இப்படத்தை பார்த்து, முத்து உலக சாதனை செய்துள்ளார்.

நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்கள், இப்படி பத்து பேர் இருந்தால் தமிழன் பெயர் உலக வரலாற்றில் இடம் பெறாமல் இருக்குமா? அஜித், விஜய் ரசிகர்களும் இதுபோன்று முயற்சிக்கலாமே?!!

தெரிந்த கதை தெரியாத புராணம்-2

....அம்மை நோய், சீதோஷ்ண ஜுரங்கள், கண்பார்வைக் கோளாறு, கை கால் முடக்கம போன்ற பலவித உபாதைகளால் அவதிப்படும் மக்கள் உடனடியாக அடைக்கலம் தேடுவது அம்மனையே.....

.... தந்தையார் ஜமதக்னியின் ஆணைப்படி தன்னுடைய தாயார் ரேணுகா தேவியின் கழுத்தைக் கோடாரியால் துண்டித்தார் பரசுராமர். அதன் பின் தந்தையிடம் வரம் பெற்று, அவசரத்தில் தாயின் தலையையும் வேறொரு பெண்ணின் உடலையும் ஒன்றிணைத்து உயிர் பெறச் செய்ததாகப் புராணக்கதை கூறும்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20050727064909&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0