7.31.2005

சந்திரமுகி திரைப்படத்தை 102 முறை பார்த்து சாதனை!!

கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளத்தைச் சேர்ந்த முத்து என்பவர் காய்கறி கடையில் பணிபுரிந்து வருகிறார். சந்திரமுகி வெளியான ஏப்ரல் 14ம் தேதி முதல் கோவை ராம் நகரிலுள்ள குமரன் திரையரங்கில் தினமும் படத்தை பார்த்து வந்துள்ளார்.

முதல் 50 நாட்களுக்கு தனது சொந்த செலவிலேயே பார்த்த இவரின் பக்தியைக் கண்டு, தியேட்டர் நிர்வாகம் இனி இப்படம் ஓடும் நாள்வரை இலவசமாகவே பார்க்கலாம் என்று அனுமதியளித்தது. இதனையடுத்து 102 நாட்களும் இவர் இப்படத்தை பார்த்து, முத்து உலக சாதனை செய்துள்ளார்.

நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்கள், இப்படி பத்து பேர் இருந்தால் தமிழன் பெயர் உலக வரலாற்றில் இடம் பெறாமல் இருக்குமா? அஜித், விஜய் ரசிகர்களும் இதுபோன்று முயற்சிக்கலாமே?!!

5 comments:

Ramya Nageswaran said...

வெங்காயம்.. புது ப்ளாக் வளர வாழ்த்துக்கள்.

உங்க ப்ளாகை படிச்சுட்டு கருத்துல சம்மதம் இல்லைன்னா ஈஸியா "போய்யா வெங்காயம்" அப்படின்னு சொல்லிடலாம். :-)))

துளசி கோபால் said...

என்னங்க வெங்காயம்,

ரம்யா என்னை முந்திக்கிட்டாங்க!

வெங்காயம் said...

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி!

//உங்க ப்ளாகை படிச்சுட்டு கருத்துல சம்மதம் இல்லைன்னா ஈஸியா 'போய்யா வெங்காயம்' அப்படின்னு சொல்லிடலாம்//

நீங்கள் ஊகித்தது சரியே. கொஞ்சம் விவகாரமான விஷயங்களை எழுதவே இந்த வலைப்பதிவு. பக்தி என்ற பெயரில் நாறிப்போயுள்ள தமிழினத்தை என்னால் திருத்த முடியாது. இனி ஒரு பெரியாரும் வரப்போவதாக தெரியவில்லை. என்னுடைய மனக்குமுறலை - சில சமயஷம் வேடிக்கைகளையும் கொட்டித் தீர்ப்பதே என் பதிவுகளின் நோக்கம்.

குழலி / Kuzhali said...

வாங்க வெங்காயம் புதுசா எழுத வந்திருக்கிங்க வாழ்த்துக்கள்

வெங்காயம் said...

நன்றி குழலி அவர்களே....

என் வலைப்பதிவை பட்டியலிட்ட தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் நன்றி....