ஒழுக்கம், நேர்மை, தேசப்பற்று இவற்றில் மற்ற கட்சியினரைவிட உயர்ந்த நிலையில் இருப்பதாக பெரும்பாலான (ஆதிக்க சாதியினரின்) பத்திரிக்கைகளும், பல்கலைவித்தகர்களாலும் சொல்லப்பட்டு நம்பவைக்கப்பட்ட பா.ஜ.க.வின் நிலை இப்போது சந்தி சிரிக்கிறது.
மக்கள் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் பேசுவதற்கு இலஞ்சம் வாங்கியதாக ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் உட்பட 11பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டுவிட்டது. குற்றவாளிகளின் பதவியை பறிக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் விசாரனைக்குழு மக்களவையில் சமர்ப்பித்தது. மக்களவை அவர்களின் பதவியைப் பறித்துள்ளது.
குற்றம் செய்த அரசியல்வாதிகள், முதல் முறையாக குற்றச்சாட்டு எழுந்த மிகக்குறுகிய காலத்தில் தண்டிக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் ஊழல் குறைய வாய்ப்பு உண்டு.
ஆனால், தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக மார்தட்டிக் கொள்ளும் பா.ஜ.க. இதனை எதிர்க்கிறது. காரணம் அதிக ஊழல்வாதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியல்லவா? (ஒருவேளை இலஞ்சம் வாங்குவது தேசப்பற்றின் அடையாளமோ?)
இந்த அயோக்கியர்கள் கூறுகிறார்கள்.... 'குற்றம் செய்தவரை தண்டிக்க வேண்டும்தான். ஆனால் அதற்கு வரைமுறை வேண்டும்...'
குற்றவாளி என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் அவர்களை தண்டிக்க வரைமுறை வேண்டுமாம். தேசத்தந்தையை கொன்ற கும்பல்களிலிருந்து வந்தவர்கள்தானே... இதற்கு மேலும் பேசுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்கலைவித்தகர்களும் எழுதுவார்கள்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக 11 குற்றவாளி உறுப்பினர்களை உடனடியாக தன்டித்த காங்கிரசு அரசுக்கும் மக்களவையை திறம்பட நடத்திச் செல்லும் சோம்நாத் சட்டர்ஜி அவர்களுக்கும் இந்தியக் குடிமகனாக இருந்து வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
12.23.2005
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இரட்டை வேடம் போடுவதில் பாஜகவை மிஞ்சமுடியாது.
வோல்கர் விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும் வெளியுறவு அமைச்சுப் பதவியிலிருந்து நட்வர்சிங்கின் இராஜினாமவை பாஜக வேண்டியது. மன்மோகன் சிங் அதற்கு ஆமோதித்து அவரை பதவி விலகக் கேட்டுக் கொண்டார். பிரச்சனை ஏற்படுத்த அனைத்து வழிகளும் அடைபட்டுள்ள நிலையில் கிடைத்துள்ள ஒரே வாய்ப்பாகிய இதை அவ்வளவு எளிதில் விட பாஜக தயாராக இல்லை. பின் அவரை மந்திரிகுழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யக் கோரியது. செய்தார் நட்வர். பின் நட்வரின் கைதையும் சோனியாவின் பதவி விலகலையும் வலியுறுத்திவருகிறது.
dinamalar ore oru congress mp ya pathi seidhi podudhu. mathavangla pathi mooch.
நன்றி மாலிக் மற்றும் அனானி....
மேலும் பல மக்களவை உறுப்பினர்களின் பதவிகளும் அவர்களின் ஊழல்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. உறுப்பினர்கள் செய்யும் தவறு மிகச் சிறியதாக இருந்தாலும் இத்தகைய தண்டனை கொடுப்பதின் மூலம், அவர்கள் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்த தயங்குவர் என்பது திண்ணம்.
இந்திய வரலாற்றில் பொன்னான நாளாக டிசம்பர் 23-யை இனி கொண்டாடலாம். அரசியல்வாதிகள் ஊழல் செய்தால் இதுவரை தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை என்ற வரலாற்றிற்கு முடிவுரை எழுதப்பட்ட நாள்.
சோம்நாத் சாட்டர்ஜி என்ற தெளிவுமிக்க, துணிவுமிக்க, நேர்மையான தளபதி நாடாளுமன்றத்தை வழிநடத்துவதே இத்தகைய நடவடிக்கைக்கு அடிப்படை காரணம் என்று கருதுகிறேன்.
மேலும், ஊழல் - சட்டத்திற்கு விரோதம் - மதக்கலவரம் - ஜாதிக் கலவரம் போன்றவற்றில் ஈடுபடும் சட்டமன்ற, நடாளுமன்ற உறுப்பினர்களை மக்களே அழைத்துக்கொள்ளும் - தண்டனைக் கொடுக்கும் அதிகாரத்தை இந்தியா என்று பெறுமோ?
பா.ஜ.க. ஒரு முகமூடி கட்சி என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். பங்காரு லட்சுமனன் கத்தை கத்தையாக வாங்கிய பின்னும், பெர்னான்ட° இதற்கு பெரும் துணையாக இருந்த பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காத கையாலாகாத பா.ஜ.க. - ஆர்.எ°.எ°. மக்கள் மன்றத்தில் இருந்து தூக்கியயெறிப்படும் நாள் நெருங்கி விட்டது.
பாராளுமன்ற உறுப்பினருக்கான ஒரு கோடி நிதியைப் பெறுவதிலும் - கையூட்டுக் பெற்ற - கொடுத்த பா.ஜ.க. எம்.பி.க்களே முன்னணி... எனவே இனி பா.ஜ.க.வை “ஊழல் முன்னனி கட்சி” என்று அழைக்கலாம்.
தமிழ்மணம் வாசகர்களுக்கு இன்று முதல் பா.ஜ.க.வை என்னுடைய கட்டுரைகளில் ஊ.மு.க. (ஊழல் முன்னணி கட்சி) என்றே அழைப்பேன். வாசகர்கள் மனதிலும், மூளையிலும் நன்றாக பதிய வைத்துக் கொள்ளவும்.
நன்றி வெங்காயம்.
மாலிக்,
அது சரி.ஆனால் காங்கிரஸ் கட்சியும் சளைத்தது அல்ல என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.....
நட்வர்சிங் என்ன சொக்க தங்கமா? ஊழல் பண்ணா யாரா இருந்தாலும் போகத்தான் வேண்டும்......கைது கோரிக்கையிலும் நியாயம் உள்ளது...
சந்திப்பு,
பதவி பறிக்கப்பட்டதையே பெரிய தண்டனையாக கொண்டாடுகிறீர்கள். கைது செய்யவேண்டும் என்று நான் நினைக்கிறேன். 50,100 லஞ்சம் வாங்கற எத்தனையோ பேர் கைது செய்யப்படும்போது இது நம்பிக்கை துரோகம் இல்லையா?
முத்து
அம்புட்டும் சரிதான்!
தூக்கி உள்ளே போட்டே ஆகனும்... அப்பத்தான் அடங்குவாங்க!
ivargalai neeki irukka kudadham. 'oru sessionku mattum 'suspend seidhirukalam.
- lal krishna advani
"parliamentil kelvi ketpadharku lanjam vangiya mp kalai oru kutathodaruku matum suspend seidhirukalam endrum avargalai dismiss seidhu ottumotha thandanai vazangiyadhu 'nyaya'malla ena edhi katchi thalaivar lk advani kurinar." - dinamalar
idharku 'garuda puranath'il enna thandanai ?
kelvi sujathavuku anuppapadugirathu.
ஊழலுக்கு யாரும் சளைத்தவர்களில்லை.
ஆனால் தேசப்பற்றுக்கு மார்தட்டிக் கொள்ளும்(தேச தந்தையை கொலை செய்வது தான் தேச பக்தியின் அடையாளம் என நினைக்கிறேன்) ஆர்.எஸ்.எஸ் உடைய அரசியல் முகம் பா.ஜ.க அதில் முன்னணியில் உள்ளது என்பது எதார்த்த உண்மை. அதனை அவர்களது ஆட்சி காலத்திலும் நிரூபித்தார்கள். அவர்கள் ஆட்சியில் இல்லாத போதும் நிரூபிக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப் படாததற்கு முன்னேயே மற்றவர்கள் எனில் ராஜினாமாவையும், கைதையும் கோரும் பா.ஜ.க தனது கட்சி காரர்கள் அதில் சம்பந்த படும் போது அதற்கு எதிரான நிலையை எடுப்பதிலிருந்தே இவர்களின் சுயரூபம் வெட்ட வெளிச்சமாகிறது.
சவப்பெட்டி ஊழலிலும், டெகல்கா ஊழலிலும் இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என நாடே அறியும். இப்படிப்பட்டவர்களுக்கு ஊழல் முன்னணி கட்சி என்பது பொருத்தமான பெயரே. இனி நானும் இதையே பயன்படுத்தலாமென எண்ணியுள்ளேன். மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.
குற்றம் செய்தவர்களின் மீது இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்திருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என நினைக்கிறேன். குற்றவாளிகளின் மீது எடுக்கப்படும் உடனடி நடவடிக்கையே இனி இது போன்ற குற்றம் செய்ய முற்படும் மற்றவர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும். தொடரட்டும் இதே ரீதியான நடவடிக்கைகள்.
இதோடு நிறுத்தாமல் அவர்களை கைது செய்து தண்டனையும் விரைவில் வழங்கப்படுமாயின் வருங்கால இந்தியாவில் ஊழல் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். அரசு ஊழல்வாதிகளின், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அத்வானி வகையறாக்களின் முனகல்களை கணக்கில் எடுக்காமல் இதே ரீதியில் முன்னேறட்டும். வாழ்த்துவோம் வருங்கால இந்தியா ஊழலற்ற நாடாவதற்கு.
அன்புடன் இறை நேசன்.
தமிழ்மணத்தில் பதிந்துள்ள உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவினை ஆதரித்தே எழுத வேண்டும். மேலும் அவர்கள் பார்ப்பனர்களுக்கு எதிராக எதையும் எழுதக் கூடாது. மீறிச் செயல்படுபவர்கள் தமிழ்மணத்தில் இருந்து அப்புறப்படுத்தப் படுவார்கள்!
ஜின்னா ஆதரவாளர் அத்வானி இருக்கும் வரை பாஜக உறுப்படாது
Post a Comment