1.14.2006

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

சித்திரை முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாக பெரும்பாலோர் கருதி கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் பெயர்கள்கூட தமிழில் இல்லை எனும்போது அது எவ்வாறு தமிழர்களின் ஆண்டாகக் கருதப்படும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?... தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்...‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியை ‘புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்’ -என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.”

தையே முதற்றிங்கள்; தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஆண்டு குறித்து மேலும் அறிய....

http://www.tamilnation.org/forum/sabesan/050421sabesan.htm
http://semparuthi.com/x/modules/news/article.php?storyid=122

11 comments:

Unknown said...

வெங்காயம்,
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

ஜோ/Joe said...

தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் ,தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

முத்துகுமரன் said...

வெங்காயம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

பரஞ்சோதி said...

உங்களுக்கும், குடும்பத்தார், மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
பரஞ்சோதி

ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

மணியன் said...

தமிழர் திருநாளில் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜோ/Joe said...

//இந்து மத தமிழ் விவசாயிகள் கடவுளுக்கு நன்றி செலுத்த பொங்கல் கொண்டாடுகிறோம்.//
தஞ்சை கண்ணன்,
கிறிஸ்துவ மத தமிழ் விவசாயிகள் பொங்கல் கொண்டாடவில்லையென்று உங்களுக்கு எப்படி தெரியும் ?தயவு செய்து உளற வேண்டாம் .

அழகப்பன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

G.Ragavan said...

இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்.

வெங்காயம் said...

வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி.

தை முதல்நாளான இன்றைய தினத்தையே புத்தாண்டின் தொடக்கமாக கொள்ள வேண்டும் என்பது என் அவா. அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவேண்டும்.

1921 மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும், அதன் பின் சுமார் 40 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தினர் ஆட்சிப் பொறுப்பில் வீற்றிருந்தும் இதுவரை செயற்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது. இன்னும் ஆரியமாயையில் இருந்து தமிழர்கள் வெளிவரவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.

ஜோ/Joe said...

Thanjai Kannan,
You are ignorant..That is all I can say now.