2.20.2006

கலவை மடத்தில் கர்ப்பமான பெண்!

வேலூர் மாவட்டம் கலவையில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் வேலை பார்த்த ஒரு பெண் முறைகேடாக கர்ப்பமாகி, குழந்தையும் பெற்றுள்ளார். அவரை மடத்தில் பணியாற்றும ஒருவரே கர்ப்பமாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் இப்போது காஞ்சி மட வழக்குகளை விசாரிக்கும் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீமிடம் போயுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண் கலவை மடத்தில் சமையல் வேலை பார்த்து வந்தார். இந் நிலையில் அவர் கர்ப்பமானார். அவரை அங்கு வேலை பார்க்கும் ஒருவரே கர்ப்பிணியாக்கியதாகத் தெரிகிறது.
இது குறித்து ஜெயேந்திரரிடம் அந்தப் பெண் புகார் கூறியதாகவும், யார் கர்ப்பம், யார் கர்ப்பமில்லைன்னு பார்க்கிறது தான் என் வேலையா என்று விவகாரத்தை கைகழுவினாராம் ஜெயேந்திரர்.

இந் நிலையில் குழந்தையும் பெற்றுவிட்ட அந்தப் பெண், புகாரை காஞ்சி மட வழக்குகளை விசாரிக்கும் போலீஸ் டீமின் பார்வைக்குக் கொண்டு சென்றுவிட்டார்.

தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஜெயேந்திரர் ஏதாவது வாய் திறந்தால், இந்த வழக்கிலும் ஜெயேந்திரர் இழுத்துவிடப் படலாம் என்று தெரிகிறது. இதனால் பயங்கர டென்சனில் இருக்கிறாராம் சங்கராச்சாரியார்.

நன்றி

5 comments:

Anonymous said...

அன்புள்ள வெங்காயம்,

இந்தப் பதிவை திருமலைராஜன், டோண்டு, அருண்வைத்யநாதன், சுனாமி வெங்கடேஷ், ஹரிகிருஷ்ணன், பாரா, இரா.முருகன், பத்ரி, அன்புடன் பாலா, முகமூடி, மாயவரத்தான், ஜெயஸ்ரீ, ஜெயந்திசங்கரி போன்றவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அல்வாசிட்டி விஜய், பினாத்தல் சுரேஷ், ராமச்சந்திரன் உஷா, துளசி, ராமநாதன், லாடுலபக்குதாசு போன்றவர்களும் படிக்க வேண்டும். எனவே மற்ற தலங்களுக்கும் சென்று விளம்பரமாக இடுங்களேன்.

சீமாச்சு.. said...

ஏங்க,
அறிவாலயத்துல ஏதாவது பொண்ணு கர்ப்பமானா..அது சின்னக் கலைஞர் ஆகுமா... ஆனாலும் ஆகுமோ...
அதேபோல..
சத்தியமூர்த்தி பவன்ல கர்ப்பம் ஆனால் மன்மோகன் சிங்கைப் பழி சுமத்தலாம்..
மைக்ரோசாப்ட் ஆபீஸ்-ல ஏதாவது கர்ப்பமானாக்கூட நம்ம பில் கேட்ஸ் மேல பழியைப்போடலாம்..

மிக அருமையான தருக்கம்...இதற்கு ஒர் எலிப்பாண்டி சப்போர்ட் வேற..

முத்துகுமரன் said...

சீமாச்சு, கலவை மடம் வழிபாட்டுக்குரிய இடம் சொல்கிறார்கள். மேலும் புனிதமான இடமென்று கோடிக்கணக்கான மக்கள் நம்பும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதால் அது குறித்து கேள்வி எழுப்பபடுகிறது.
*
காஞ்சி வழக்கின் போது அரசாங்கம் தெரிவித்த முக்கியமான தகவல் காஞ்சிமடம் ஒரு வழிபாட்டு தலம் அல்ல. அது ஒரு குடியிருப்பு பகுதி. அரசாங்கத்தின் கூற்றை இச்சம்பவம் மெய்ப்பித்திருக்கிறது. அந்த வகையில் இது ஒரு சாதரண நிகழ்வுதான்.

Anonymous said...

@ Seemachu,
அறிவாலயம் மற்றும் மைக்ரோசாப்ட்'ன் ஆபீஸ் ஆகியவை கடவுளின் தலமாகவும், புனித மத தலமாகவும் பார்க்கப்படுவதில்லை.
காஞ்சி/கலவை வாழும் தெய்வங்களின் இடமாக அல்லவா மதிக்கப்படுகிறது (ஒரு சிலரால்).

கலவை மடத்தை ஒரு கட்சியாக அறிவித்து விட்டால் அல்லது ஆபீஸ் ஆக அறிவித்துவிட்டால் இந்தக் கேள்விகள் யாரும் எழுப்பமாட்டார்கள்...

சீமாச்சு.. said...

அன்பின் முத்துக்குமரன்,
சம்பந்தப்பட்ட பெண் கலவை மடத்தில் "சமையல் வேலை" செய்து கொண்டிருந்தவர். அவர் முறை கேடான முறையில் கர்ப்பம் ஆகியிருக்கலாம்.. அது கலவை மடத்தில் தான் நடந்தது என்பதற்கு சான்றுகள் எதுவும் இல்லை.. ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வேலை செய்பவர்களின் ஒழுக்கத்திற்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டியதில்லை.. அப்படிப் பார்த்தால் சென்ற வருடம் இங்கு அமெரிக்காலில் கத்தோலிக்க சர்ச்சுகளில் குழந்தைகளிடம் (வருடக்கணக்கில்) நடந்த பாலியல் வன்முறைகளுக்கு, யாரும் போப்பைக் குறை சொல்லவில்லை... அது ஒரு சம்பந்தப்படட நபர்களின் ப்ரச்சினையேயொழிய அமைப்பின் ப்ரச்சினையல்ல..
செய்தியை எப்படி வேண்டுமானாலும் திரிக்கலா.. நடந்தது என்ன.. அதன் மேல் ஏற்றப்பட்ட பொருள் என்ன என்பதைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்தால்.. இரண்டுக்கும் வித்தியாசம் சுலபமாகத் தெரியும். அதற்குத்தான்.. நான் மற்ற அமைப்புக்களை உதாரணம் கோரினேன்.. இதில் அந்த அமைப்பு மத சம்பந்தப்பட்டதா இல்லையா என்பது தேவைப் படாத விஷயம்...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...