9.05.2005

விநாயக லீலை: புராணகதை

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

- விநாயகர் ஸ்லோகம்

தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார். இது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.

யானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டு அவனை அழித்தார் விநாயகர்.

விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர்.

நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும் பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு.

புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.

நன்றி: தட்ஸ் தமிழ்

4 comments:

வீ. எம் said...

பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து

அப்போ வினாயகர் பேச்சிலர் இல்லயா??? மெய்யாலுமா?

Anonymous said...

அப்போ வினாயகர் பேச்சிலர் இல்லயா??? மெய்யாலுமா?

The vinayaka who married was an avathar of the impersonal bhramman.Impersonal bhramman is a bachelor,but his avathar,Ganesh isnt.

வெங்காயம் said...

இதையும் கொஞ்சம் படிங்க!

உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு திருக்கல்யாண விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது.

ராமபிரான் சீதையை தேடி இந்த வழியாக சென்றபோது இங்குள்ள விநாயகரை தரிசித்து சென்றதாக ஐதீகம். இங்குள்ள விநாயகருக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது.

விநாயகர், சித்தி, புத்தி என்ற 2 சக்திகளுடன் விளங்குவதாக புராணக் கதைகள் உள்ளன. சித்தி என்னும் தேவி, கிரியா சக்தியின் வடிவம், புத்திதேவி இச்சா சக்தியின் வடிவம். இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானத்தின் மூலம் ஒரு காரியத்தை செய்ய முடியும். இந்த தத்துவத்தின் விளக்கமாகவே ஞான கணபதி சித்தி, புத்தி தேவியர்களுடன் விளங்குகிறார்.

நன்றி: தினமலர்

G.Ragavan said...

புராணக் கதைய விடுங்க. மேல ஸ்லோகமுன்னு போட்டிருக்கும் தமிழ்ச் செய்யுளில் பெரிய விஷயமே இருக்கு. இது கடவுள் வாழ்த்து என்பதை விட மருத்துவக் குறிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கும் பிள்ளையாருக்கும் தொடர்பு இல்லை என்று நினைக்கிறேன்.

மேலும் நீங்கள் போட்டிருக்கும் செய்யுளில் சொற்பிழை இருக்கிறது. திருமேனி என்று இருக்க வேண்டிய இடத்தில் துறைமேனி என்று தப்பாகக் கொடுத்திருக்கின்றீர்கள்.

திருமேனி என்றால் குப்பைமேனி என்ற செடி.