9.17.2005

பெரியார் 127

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஈரோட்டுக் கிழவனின் 127ஆம் பிறந்த நாள் இன்று. பெரியாரை தமிழர்களின் மனத்திலிருந்து தூக்கியெறிய பார்ப்பனர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இன்னும் மறக்கடிக்க முடியவில்லை. சமீபத்திய உதாரணம் விஜயகாந்தின் தே.மு.தி.க.

இந்த கட்சி துவங்கப்படுவதற்கு முன்பிருந்தே விஜயகாந்திற்கு ஆதரவாக பார்ப்பன பத்திரிக்கையான தினமலர் எழுதி வந்தது. அவரும் தன்னுடைய அறிவையெல்லாம் அடகு வைத்துவிட்டு, கட்சி தொடக்கவிழா அழைப்பிதழை திருப்பதி உண்டியலில் இட்டு வெங்டாசலபதிக்கு முதல் பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்திருந்தார். (வந்தரா என்பதை மாநாட்டிற்கு சென்றோர் கூறவும்.) மாநட்டு நிகழ்ச்சிக்கு கூடவே சோதிடரையும் அழைத்து அவருக்கு ராசமரியாதையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (மாநாட்டு நிகழ்வுகளை எழுதிய தினமலர் தே.மு.தி.க.வினரை தடபுடலாக ஆதரித்து எழுதியிருந்தது. விஜயகாந்த் மாநாட்டு மேடையில் தினமலர் பத்திரிக்கையை படிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.) ஆனாலும் விஜயகாந்த் தன்னுடைய கட்சியின் பெயருடன் 'திராவிட கழகம்' என்று இணைத்திருப்பதை அது விரும்பவில்லை. அதை ஒரு குறையாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பெரியாரின் செல்வாக்கை அறிந்துள்ள எவரும் தனக்குப் பிடிக்கவில்லையானாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாத சக்தி பெரியார் ஒருவரே. ஆனால் இன்றைய பத்திரிக்கைகள் அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதைவிட அவருக்கு மரியாதை தரும் அரசியல்வாதிகளின் செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.

பெரியாரின் வாழ்க்கையின் முக்கிய விதயங்கள் குறித்து அறிய இங்கே அழுத்தவும்.

9 comments:

இளங்கோ-டிசே said...
This comment has been removed by a blog administrator.
இளங்கோ-டிசே said...

பெரியாரை அவரது பிறந்ததினத்தில் நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

Anonymous said...

பெரியாரின் பார்ப்பனீயக்கொள்கையையும் பார்ப்பனர்களின் பெரியாரிசத்தையும் தமிழர்கள் மனத்திலிருந்து தூக்கி எறிந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன வெங்காயத்தாரே...

Anonymous said...

miha chariyana karutthu

Anonymous said...

//தமிழர்கள் மனத்திலிருந்து தூக்கி எறிந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன //

Mr.Garlic,

Well said. As far as I know, Tamilan acknowledge the temple worship after Jayalalaitha who is from School of Periyar.

We, Nesakumar & Neelakandan Convincing fellow tamilans that Neohinduism without Puranas.

Anyhow, Kanchi seer's arrest if condemnable. Can Jaya dare to arrest K.Veeramani or Vajpayee?

Anonymous said...

Vijaykanth naicker Ramasamy naickerukku mariyathi pannirukkar.Ambuttu than visahayam.Ithai poyi oru periya achievement appadinnu kondadittirukkengale?

-Rajinikanth

-/பெயரிலி. said...

அண்ணாத்துரையை மட்டும் சிலநாட்கள்முன்னால் எல்லோரும் மறந்துவிட்டனரே:-(

Anonymous said...

அண்ணா நூற்றாண்டு விழாவை பாஜக நாடு முழுவதும் கொண்டாடும்: வாஜபேயி அறிவிப்பு



சென்னை, செப். 18: தமிழக முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற அண்ணா பிறந்த நூற்றாண்டு விழாவை நாடு முழுவதிலும் பாஜக கொண்டாடும்.

அக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜபேயி இதை சென்னையில் சனிக்கிழமை அறிவித்தார்.

சென்னை தீவுத் திடலில் நடந்த கங்கை -காவிரி இணைப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் பா.ஜ.க. சிறிய கட்சியாக உள்ளது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அறிந்து, அவர்களுக்காகப் போராட்டங்கள் நடத்தி, மக்கள் மனதில் இடம் பிடித்தால் கட்சி அபரிதமாக வளறும்.

இதற்கு தமிழக முதல்வராக இருந்த காலஞ்சென்ற அண்ணாவை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவருடன் எனக்குப் பழக்கம் உண்டு. அவருடைய எளிமை எனக்குப் பிடிக்கும். எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உண்டு. ஏழை மக்களுக்காக அவர் கவலைப்பட்டது எனக்குப் பிடிக்கும்.

அவர் தேசியவாதியாகவும் திகழ்ந்தார். தமிழ்நாடு, தமிழ் மொழி, திராவிட கலாசாரம் ஆகியவற்றின் மீது பற்று கொண்டு மாநில நலன்களைக் கருத்தில் கொண்டும் செயல்பட்டார்.

அண்ணா பிறந்த நூற்றாண்டு இன்னும் 3 ஆண்டுகளில் வரவுள்ளது. அதை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் கொண்டாட வேண்டும். தேசியத்துடன் மாநில நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் கட்சி வளரும்.

தொன்மைமிக்க தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியம், சமூக நீதிக்கான இயக்கம் ஆகியவை குறித்து பா.ஜ.க. பெருமிதம் கொள்கிறது.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மீனவர் சமுதாய, விவசாய சமுதாய மக்களுக்காக பாஜக போராடும் என்பதை உணர்த்த வேண்டும்.

நாம் பல மொழி பேசுபவர்களாக, பல கடவுள்களை வழிபடுபவர்களாக இருந்தாலும் நாட்டு நலன் என்று வரும்போது அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் இளையராஜாவை சமீபத்தில் தில்லியில் சந்தித்தேன். கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் இணைத்து அவர் உருவாக்கிய இசையை நான் கேட்டேன்.

இந்தியாவின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் பல கோயில்கள் தமிழகத்தில் உள்ளன. இக் கோயில்களில் உள்ள குளங்கள், பொறியியல் தொழில்நுட்பத்தில் நமக்கு உள்ள அறிவுநுட்பத்தை விளக்குவதாக உள்ளன என்றார் அவர்

Anonymous said...

M.S.Subbulakshmi yai ellarum maranthacha?Sept 16 avanga pirantha nal!