8.06.2005

ஏமாற்றாதே! ஏமாறாதே!!

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தை டைரக்டு செய்தவர் பி.வாசு. பிரபல டைரக்டரான இவரது தம்பி வித்யாசாகர். இவர் சினிமா வினியோகஸ்தராக உள்ளார். நேற்று முன்தினம் காலையில் இவர் தனது நண் பர்கள் மகேந்திரன், நடராஜன், ஆகியோருடன் சென்னை நுங் கம்பாக்கம் "காலேஜ்" ரோட் டில் காரில் சென்று கொண்டிருந்தார்.

ரோட்டின் ஓரம் இளநீர் கடை இருந்தது. அங்கு காரை நிறுத்தி இளநீர் வாங்கி குடித்தனர். இரண்டு பேர் இளநீர் கடை அருகே நின்று இளநீர் குடித்த னர். ஒருவர் காரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது 8 வயது சிறுவன் ஒருவன் நைசாக கார் அருகே வந்தான். அவன் காரில் இருந்தவரிடம், கீழே 10 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடக்கிறது. உங்களுடையதா? என்று பாருங்கள் என்று கூறினான். காரில் இருந்தவர் உடனே கீழே இறங்கி, 10 ரூபாய் நோட்டுகளை பொறுக்க ஆரம்பித்தார். ஐந்து 10 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் காருக்குள் ஏறினார்.

இதற்குள் காருக்குள் இருந்த பெட்டியை காணவில்லை. பெட்டிக்குள் ரூ.5 லட்சம் பணம் இருந்தது. காரின் அருகில் நின்று கொண்டிருந்த சிறுவனையும் காணவில்லை. அவன்தான் 10 ரூபாய் நோட்டு களை ரோட்டில் போட்டு கவனத்தை திசை திருப்பி, காரில் இருந்த ரூ.5 லட்சம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் போலீ சில் புகார் செய்யப்பட்டது.

நன்றி: தினத்தந்தி

வெங்காயத்தின் கருத்து: நம்முடைய பணம் சாலையில் கிடந்தால் அது நமக்குத் தெரியாமலா போய்விடும்? தெரியும் என்றால் அடுத்தவன் பணம் நமக்கெதற்கு? தெரியாதென்றால் அது நம்முடையதுதானா என்பதை உறுதி செய்து கொண்டிருக்கலாம் அல்லவா?

1 comment:

குழலி / Kuzhali said...

அய்யோ இது தற்போது சென்னையில் மிக சாதரணமாக நடைபெறும் விடயம், இதில் அனுபவமும் உண்டு, சென்னையில் ஒரு உணவு விடுதியில் எங்கள் வண்டியை நிறுத்திவிட்டு என் தந்தை,தங்கை ஓட்டுனர் மற்றும் சொந்தக்காரர்கள் சாப்பிட சென்றனர், என் அம்மா,பெரியம்மா,சின்னம்மா மட்டுமே வண்டியில் இருந்தனர், திடீரென ஒரு சிறு பையன் வந்து என்னமா பணம் கீழே கிடக்கின்றது உங்க பணத்தை போட்டுவிட்டீர்களே என்று கூற ஒரு வேளை என் தங்கைதான் கையிலிருந்த பணத்தை போட்டுவிட்டாளோ என்று கதவை திறக்க முயற்சிக்கும் போது திடீரென என் பெரியம்மா கதவை சாத்திவிட்டு இறங்காதே நம் பணமாகவே இருந்தால் கூட அதை அவன் எடுத்துக்கொள்ளாமல் ஏன் நம்மிடம் சொல்கின்றான் என கூறி கதவை நன்றாக சாத்திவிட்டு என் தந்தைக்கு கைத்தொலைபேசியில் அழைப்பு கொடுத்து விட்டு வண்டியிலேயே காத்திருந்தனர், அதற்குள் இரண்டு மூன்று முறை சிலர் வந்து பணம் கிடக்கின்றது பணம் கிடக்கின்றது என்றனர், பிறகு என் தந்தையும் தம்பிகளும் வந்தவுடன் அவர்கள் தெரித்து ஓடிவிட்டனராம், இதில் என்ன கொடுமையென்றால் இது நடந்த நேரம் பகல் இரண்டு மணி, அந்த நேரத்தில் குறைந்தது 50 கார்களும் 500 மக்களும் அந்த வளாகத்தில் இருந்திருக்குமாம். இத்தனை கும்பலுக்குமிடையில் கொள்ளை அடிக்க முயல்கின்றன.