ஆக.26 கோகுலாஷ்டமி
கண்ணனின் கதை கேட்டால், அதற்கான காரணம் புரியும்.
சூரசேனம் என்ற நாடு பாரதத்தில் இருந்தது. இந்நாட்டின் மன்னன் நாட்டின் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டான். அவனது பெயர் சூரசேனன். இவனுக்கு வசுதேவன், என்ற மகன் பிறந்தான். வசுதேவர், வாலிபன் ஆனதும் மதுராபுரியை ஆண்ட உக்கிரசேனன் என்பவனின் தம்பி மகள் தேவகியை திருமணம் செய்து கொண்டார். உக்கிரசேனனின் மகன் கம்சன். அவன் தன் சித்தப்பா மகள் தேவகி மீது மிகுந்த அன்புடையவன். எனவே, மணமக்களை தன் தேரிலேயே ஏற்றி, மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
ஊர் எல்லையை அடைந்ததும் வானத்தில் ஒரு ஒலி எழுந்தது.
"கம்சா! நீ எந்த தங்கையின் மீது பாசத்தைக் கொட்டுகிறாயோ, அவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும். நீ பூமியில் வாழும் மக்களுக்கு செய்யும் கொடுமைக்கு பரிசு இது!' என்றது.
கம்சன் ஆடிப் போனான். கண்ணாய் மதித்த தங்கையை காலால் மிதித்து கீழே தள்ளினான். ஓடும் தேரிலிருந்து விழுந்த அவள், ரத்த வெள்ளத்தில் மிதந்தாள். அவள் சாகாததைக் கண்ட கம்சன் வாளை ஓங்கி வெட்டச் சென்ற போது, கணவர் வசுதேவர் தடுத்தார்.
"மைத்துனா! கலங்காதே. எட்டாவது குழந்தையால் தானே உனக்கு சாவு. அக்குழந்தை மட்டுமல்ல, முதல் ஏழு குழந்தைகளையும் கூட உன்னிடமே தந்து விடுகிறேன். அவற்றை என்ன வேண்டுமானாலும் செய். பாசத்துடன் மதித்த தங்கையைக் கொல்லாதே!' என்றார்.
கம்சன் அதை ஒப்புக் கொண்டான். அவர்களை சிறையில் அடைத்து பாதுகாத்தான்.
இந்த எச்சரிக்கைக்கு பிறகும் கம்சன் திருந்தவில்லை. தன் தந்தை உக்கிரசேனனை சிறையில் அடைத்து விட்டு, ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றி, மதுராவின் அரசன் ஆனான்.
மதுராவில் வசித்த யாதவ குல மக்கள், அவனது கொடுமை தாங்காமல், பக்கத்து நாடுகளுக்கு சென்று விட்டனர். தேவகிக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. எல்லாக் குழந்தைகளையும் கொன்றான் கம்சன். ஏழாவது கர்ப்பம் தரித்தது. இதே சமயத்தில், கோகுலத்தில் வசித்த நந்தகோபன் என்பவரின் மனைவி ரோகிணி என்பவளும் கர்ப்பிணியானாள்.
அப்போது, ஸ்ரீமன் நாராயணன், தன் சகோதரி பார்வதியின் அம்சமான மாயை எனப்படும் துர்க்கையை அழைத்து, "கோகுலத்தில் கர்ப்பமாக இருக்கும் ரோகிணியின் வயிற்றுக்குள் நீ செல். அவள் வயிற்றில் இருக்கும் கர்ப்பத்தை கலைத்து விடு. அந்த இடத்தில் என் அம்சமாக தேவகியின் வயிற்றில் வளரும் கருவை வைத்து விடு. நந்தகோபருக்கு இன்னொரு மனைவி இருக்கிறாள். அவள் பெயர் யசோதை. அவள் வயிற்றில் நீ கருவாகத் தங்கிவிடு. உலக நன்மைக்காக இக்காரியம் செய்யும் உன்னை உலக மக்கள் காளியாகவும், சண்டியாகவும், துர்க்கையாகவும் வழிபடுவர்!' என்றார்.
துர்க்கையும் அப்படியே செய்தாள்.
ரோகிணியின் வயிற்றுக்குள் சென்ற அந்தக்கரு வளர்ந்தது. அவள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தையே பலராமன் எனப்பட்டான்.
தேவகிக்கு கர்ப்பம் கலைந்த செய்தியால் கம்சன் நிம்மதியடைந்தான். அடுத்து, அவளுக்கு ஏற்படும் கர்ப்பமே தனக்கு எமன் என்பதை உணர்ந்த அவன், காவலை அதிகப்படுத்தினான். தேவகியும் கர்ப்பமானாள்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, தன் அண்ணனின் பெயர் தாங்கிய தாயான ரோகிணிக்கு பெருமை தரும் விதத்தில் அவளது பெயர் கொண்ட நட்சத்திரத்தில், நள்ளிரவு நேரத்தில் நாராயணன் பூவுலகில் அவதாரம் செய்தார். கண்ணுக்கு இமை போல், உலகத்தை பாதுகாக்க வந்ததால், தேவகி தன்னையறியாமல் அவனை "கண்ணா' என அழைத்தாள்.
இதே நாளில், சற்று நேரத்தில் யசோதையின் வயிற்றில் துர்க்கை அவதரித்தாள். கண்ணனும், துர்க்கையும் அண்ணனும், தங்கையுமாய் அவதாரம் செய்த நன்னாளே கோகுலாஷ்டமி எனப்படுகிறது.
கண்ணன் பிறந்த போது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் காட்சி தந்தான். அவர்கள் அவனை வணங்கி, சாதாரண குழந்தை வடிவாகும்படி கேட்டனர். அவ்வாறே அவன் ஆனான். தன்னை கோகுலத்தில் நந்தகோபர் மனைவி அருகில் படுக்க வைத்து விட்டு, யசோதைக்கு மயக்கம் தெளியும் முன் அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைக்கு தூக்கி வர கட்டளையிட்டான். காவலர்களை உறங்க வைத்தான்.
நந்தகோபர் சிறையைத் திறந்து வெளியே சென்றார். யமுனைக் கரையிலுள்ள கோகுலத்திற்கு சென்று, பெண் குழந்தையை தூக்கி வந்தார். தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என கேள்விப்பட்ட கம்சன் அதைக் கொல்ல வந்தான்.
காலைப் பிடித்து துõக்கி ஓங்கி அடிக்க முயலும் போது, அது விஸ்வரூபம் எடுத்து பயங்கரமாக காட்சியளித்தது.
"உன்னைக் கொல்பவன் கோகுலம் சென்று விட்டான். நான் துர்க்கை. என் காலைப் பிடித்து துõக்கியதால், என்னை சரணடைந்ததாக கருதி, உன்னை விட்டு விடுகிறேன். என் பாதம் சரணடையும், கெட்டவர்களும் நற்கதியே அடைவர். நீ நாராயணனின் கையால் அழிவாய்!' என்றாள்.
அதன்படியே கம்சனைக் கொன்ற கண்ணன், பெற்றவர்களை விடுவித்தான்.
கம்சனின் மனைவியரான அஸ்தி, பிராஸ்தி ஆகியோர் கண்ணன் மீது கடும் கோபம் கொண்டனர். அவர்கள் மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் புத்திரிகள். மகள்கள் கணவனை இழந்து வருந்துவதைக் கண்ட ஜராசந்தன் கண்ணனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனோடு வந்த வீரர்களில் பெரும்பாலோர் பாவிகள்.
இந்நேரத்தில் பூமாதேவி கண்ணனிடம் வந்து, அந்தப் பாவிகளைக் கொன்று, தன் பாரத்தை தணிக்க வேண்டிக் கொண்டாள். கண்ணனும், பலராமனும் இணைந்து அவனைத் தோற்கடித்தனர்.
பின்னர், பாண்டவர்களுக்கு உதவியாக வந்த கண்ணனை "கிருஷ்ணா' என உலகம் அழைத்தது. அவர் அர்ச்சுனனுக்கு உபதேசித்த நன்மொழிகள் "பகவத்கீதை' என்ற பெயரில் பாரெல்லாம் புகழ்பெற்று விளங்குகிறது.
கண்ணன் இளமையில் செய்த சேஷ்டைகளை நினைவு கூறும் வகையில், கோகுலாஷ்டமியன்று உறியடித் திருவிழா நடக்கும். வீடுகளில் கண்ணனின் பாதம் பதித்த கோலம் போட்டு, நெய் பண்டம், வெண்ணெய் படைத்து வழிபடுவர்.
குழந்தைக் கண்ணனை வரவேற்க நாமும் தயாராவோமே!
நன்றி: தினமலர்
8.21.2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//அவள் வயிற்றில் இருக்கும் கர்ப்பத்தை கலைத்து விடு. அந்த இடத்தில் என் அம்சமாக தேவகியின் வயிற்றில் வளரும் கருவை வைத்து விடு//
ஏற்கனவே, பரிணாம வளர்ச்சிக்கும் இந்து மதத்துக்கும் முடிச்சுப் போட்ட பூணூல் கும்பல் சோதனைக் குழந்தை பற்றி புராணங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது என்று ஜல்லியடிப்பார்கள்.
ஏய்யா, இருக்கிற சீரீயல் பத்தாதுன்னு இந்த கதைய வேற,
சுருக்கமா எழுதும்யா,
திருட்டு, விபச்சாரம், பெண்களை மறைந்து நின்றும் பார்க்கும் வக்கிரம் போன்ற நல்ல குணங்களைக் கொண்ட இவன் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்கள்தான் கீதையாமே...
vanakkam aiya vengayam avargale,
what is wrong in the story of kannan?His life is great example for all of us.He is a great philsopher to have ever born in the world.He is a great strategist.He was a great king,teacher and human.
Kannan married many women,yes.Lovvu panni than ellarayum kattinan.Athukku oru thiramai vendama aiya?16,000 ponnugalai love panni kalyanam pannuvathu satharanamana velaya?Athu oru thiramai illaya?Ithula enna aiya avan mela poramai?
Kannan pudavai thirudinannu solreengale,,endha ponnavathu avan pudavai thirudinannu complaint pannirukkala?They liked it,they loved him.Viurupappata ponnugaloda sandoshama irukarathula enna aiya thappu?Ithula en avanai thitareenga?
Follow him in every aspect of life.Thiramai irundhal 16,000 ponnugalai davadichu paarunga..nadakkumanu....
kadavul pudavai thirudakoodatha aiya?kalyanam pannakoodatha aiya?endha oor sattam aiya ithu?
regards
chellapa
Post a Comment