8.19.2005

மாயவரம் - சில சிறப்புத் தகவல்கள்

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் போலாகுமா?’ என்பார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்தது, மாயூரம் என்னும் மயிலாடுதுறை.

பிரம்மா படைப்புத் தொழிலைத் துவங்க உத்தரவு பெற்ற ஊர் எது?
விநாயகரும், முருகனும் வழிபட்ட ஆலயம் எது?
நந்திதேவர் சாபம் விலகிய இடம் எது?
லட்சுமியும், சரஸ்வதியும் தொழுத ஊர் எது?
கங்கை முக்தியடைந்த தலம் எது?
மன்மதன், அகத்தியர், கண்வ ரிஷி ஆகியோர் பூஜை செய்த கோயில் எது?
எல்லாம் இந்த மயிலாடுதுறைதான்.

அபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி திருக்கோயிலைச் சுற்றிப் பார்க்க, இரண்டு மணி நேரமாவது வேண்டும். 3,78,913 சதுரஅடியில் அமைந்த பிரமாண்டமான கோயில் இது. நான்கு பக்கச் சுற்றுமதில்களுடன் கிழக்கே பெரிய ராஜகோபுரம், நம்மை ‘வா, வா’ என்று அழைக்கிறது.

உள்ளே நுழைந்தால், கொடி மரத்துக்குத் தெற்குப்பக்கத்தில் தலவிநாயகர், பெரிய விநாயகர் என்ற பெயரில் நம்மை ஆசிர்வதிக்கிறார். வடக்கே அவரது தம்பி ஆறுமுகன்.
வெளிப்பிராகாரத்தில் வடக்கு மதிலையட்டி கிழக்கு முகமாக ஒரு சிறு கோயில் இருக்கிறது. சாதா பார்வையிலிருந்து தப்பிவிடும் அந்த சன்னதியை, கட்டாயம் அனைவரும் தரிசனம் செய்யவேண்டும். ஏன்? அதுதான் ஆதிமாயூரநாதர் சன்னதி. அங்கே சிவலிங்கத்தின் பக்கத்தில் இருந்தபடி மயில் ஒன்று பூஜைசெய்து கொண்டிருக்கிறது. யார் அந்த மயில்? பார்வதிதேவிதான். மயிலாடுதுறை என்று ஊருக்கே பெயர் வரக் காரணம், அந்த மயில்தான். (அதை கதைப் பகுதியில் பார்க்கலாம்.)

அருகில், அகத்திய விநாயகர் சன்னதி இருக்கிறது. அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டவர் இந்தப் பிள்ளையார். வெளித்திண்ணையில் இன்னுமொரு விநாயகர். பெயர்? கணக்குப் பிள்ளையார்.

இவர்களையெல்லாம் தரிசனம் செய்துவிட்டு வடக்கு நோக்கிச் சென்றால் அபயாம்பிகை சன்னதியை அடையலாம். அங்கே நுழைந்ததுமே அன்னையின் கருணைவெள்ளம் நம்மை இழுக்கிறது. தாய் தன் குழந்தையை இரு கைகளையும் நீட்டி அழைப்பதுபோல் இருக்கிறது. அபயாம்பிகை, நான்கு கரங்களுடன் எழுந்தருளியிருக்கிறாள். மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் இருக்கிறது. இடது கரம் கீழாகத் தொங்க, வலது கையில் கிளி ஒன்றை ஏந்தி அபயம் அளிக்கிறாள். புன்முறுவலுடன், அருளே உருவாய் பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள் தேவி. அஞ்சல் நாயகி, மயிலம்மை போன்ற பெயர்களும் இவளுக்குண்டு.

அம்பாள் சன்னதிக்கு அடுத்த சன்னதியில், அனவித்யாம்பிகை என்ற போர்டு தொங்குகிறது. எட்டிப் பார்த்தால், உள்ளே ஒரு சிவலிங்கம்தான் இருக்கும். ‘என்னப்பா இது, விக்ரஹத்தை மாற்றிகீற்றி வைத்துவிட்டார்களா?’ என்று தோன்றும். விஷயம் வேறு.
நாதன்சன்மன் என்பவன், கயிலையில் ஈசனுக்குப் பணிபுரியும் பாக்கியம் பெற்றவன். அவன் இந்த மயிலாடுதுறைக்கு வந்து ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு முக்தியடைந்தான். அவனுடைய மனைவிதான் அனவித்யை. கணவனைப் போலவே மனைவியும் அந்த சிவபெருமானை வழிபட்டு சிவலிங்கத்தை பூஜித்து, அந்த சிவலிங்கத்துக்குள்ளேயே உட்புகுந்து மறைந்து, சிவபதத்தை அடைந்தாள். அதனால் அந்த லிங்கம், அவளது பெயரால் அனவித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறது.
ஊன்றி அந்த லிங்கத்தைப் பார்த்தால், இன்னொரு விஷயம் புலப்படும். லிங்கத்துக்குப் புடவைதான் சாத்துகிறார்கள்.


‘நீற்றினான் நிமிர்புன்சடையான் விடைஏற்றினான் நமையாளுடையான் புலன்மாற்றினான் மயிலாடுதுறையென்றுபோற்றுவார்க்கு முண்டோ புவி வாழ்க்கையே’
என்று திருநாவுக்கரசு சுவாமிகளின் திருப்பதிகத்தைப் பாடியபடியே இப்போது மூலவரை தரிசனம் செய்யலாமா?

லிங்க உருவில் தரிசனம் தருகிறார் மாயூரநாத சுவாமி. பிரம்மலிங்கம், வள்ளலார், மயிலாடுதுறையான், அஞ்சொலாளுமைபங்கன் என்று ஏகப்பட்ட பெயர்கள் இவருக்கு உண்டு. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றவர்களால் பாடப்பட்ட இந்த மாயூரநாதரின் பெருமைகளைச் சொல்லி மாளாது. பார்வதியுடன் இந்தத் தலத்தில் மகிழ்ச்சியோடு மாயூர தாண்டவம் ஆடியவர் இவர்தான். ஆனந்தமாக இங்கு இருக்கும் இறைவன், வணங்கும் பக்தர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளி அள்ளி அளிக்கிறார்.
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இத்திருக்கோயிலில் எண்ணற்ற திருவிழாக்கள் உண்டு. அனைவருக்கும் தெரிந்த விழா, கடைமுழுக்கு. ஐப்பசித் திங்களின் இறுதிநாளில் நடக்கும் பெரும் தீர்த்த விழா இது. அன்றைக்கு நாடெங்கிலுமிருந்து மக்கள் இங்கே கூடுகிறார்கள். மாயூரநாதர் கோயிலின் பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு வந்து காவிரியில் தீர்த்தம் கொடுத்து அருளும் புண்ணிய நிகழ்ச்சி அது.
கார்த்திகை மாத முதல்நாள் விடியற்காலையில் கடமுழுக்கு நடைபெறுகிறது. கடைமுழுக்கில் முழுகிய மக்கள், கடமுழுக்கிலும் மூழ்கினால்தான் பலன் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அது என்ன முடமுழுக்கு?
இங்கே கடைமுழுக்கில் நீராட, நெடுந்தொலைவிலிருந்து முடவன் ஒருவன் கிளம்பிவந்தான். அவன் வருவதற்குள் கடைமுழுக்கு விழா முடிந்துவிட்டது. முடவன் மிகவும் வருத்தப்பட்டு ஈசனிடம் முறையிடவே, ‘‘கவலைப்படாதே... நீ, நாளை சூரிய உதயத்திற்கு முன் ரிஷப தீர்த்தத்தில் நீராடு. துலாமாதம் முழுவதும் நீராடிய பலன் உனக்குக் கிடைக்கும்’’ என்று மாயூர நாதர் கூறி மறைந்தார். அப்படியே அவனும் செய்து முக்தியடைந்ததாக புராணம் சொல்கிறது.

துலாக்கட்டம் என வழங்கும் காவிரித்துறையில், ஆற்றின் நடுவில் ரிஷபப் பெருமான் எழுந்தருளியிருக்கிறார். ரிஷபத்தின் கர்வத்தை ஈசன் அடக்கிய இடம் இது.
தீபாவளி_அமாவாசையன்று கங்கை முதலிய எல்லா புண்ணிய நதிகளும் இங்கே காவிரியில் நீராடி தங்கள் பாபங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதிகம். அன்றைய தினம், காவிரிநீரை கரகத்தில் எடுத்து, எத்தனை ஆண்டுகள் வைத்திருந்தாலும் நீர் கெட்டுப்போவதில்லை என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதோ இப்போது, ‘மயிலாடுதுறை’ என்று பெயர் வந்த கதையைப் பார்க்கலாமா?
பிரம்மபுரம்
பிரளயம் தோன்றி, உலகம் மறைந்து, மீண்டும் பூமி பூப்பூக்கும் நேரம்.
மகாவிஷ்ணுவின் நாபியில் தோன்றிய பிரம்மா, சிவபெருமானை வணங்கினார். ‘‘இறைவா, மீண்டும் எனக்கு படைக்கும் ஆற்றலைத் தந்தருள்க’’ என்று வேண்டினார்.
‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று அருள்பாலித்த இறைவன், ‘‘பிரம்மனே இந்த வனம், இனி உன் பெயரால் பிரம்மவனம் என்று பெயர் பெறும். இங்கே சிவலிங்கம் ஒன்று உனக்குக் கிடைக்கும். அதற்கு ஓர் ஆலயம் எழுப்பி சுற்றிலும் ஒரு நகரத்தையும் உருவாக்குவாயாக’’ என்றும் ஆணையிட்டார்.

பிரம்மாவும் அவ்வாறே செய்து ஈசனின் அருளைப்பெற்றார். சிருஷ்டித் தொழிலை மீண்டும் ஆரம்பித்தார். உதவிக்கு ஏழு முனிவர்களைப் படைத்தார். துணைபிரம்மன்களையும் உருவாக்கினார். அவர்களில் ஒருவன்தான் தட்சன்!
அந்த பிரம்மபுரம்தான் தற்போதைய மயிலாடுதுறை.

தாட்சாயணி
தட்சனின் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
தட்சனின் மகள், பார்வதியான தாட்சாயணி. மாப்பிள்ளை, சிவபெருமான்.
தட்சன் இறைவனை மதிக்காமல், அழைக்காமல் ஒரு யாகம் செய்யத் துவங்கினான்.
இறைவனிடத்தில் ஒருவாறு அனுமதிபெற்று, அந்த யாகசாலையை அடைந்தாள் தாட்சாயணி.

பெற்ற மகளையே அவமதித்தான் தட்சன்.
தாட்சாயணி சினம் கொண்டாள். உலகமே நடுங்கிற்று. அப்போது ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஓர் அழகிய மயில், பயத்துடன் பறந்து, தாட்சாயணியின் கூந்தலைக்கண்டு ‘இதுவும் தன் மயில் இனம்தான்’ என்று நினைத்து, அம்மையை வந்தடைந்தது.
‘‘அஞ்சாதே’’ என்று மயிலுக்கு அபயம் தந்து, அனுப்பி வைத்தாள் தாட்சாயணி.
பின்னர் தட்சனின் யாகத்தை நிறுத்தக்கருதி, அந்த யாகத்தீயில் தியாகத் தீயாய் விழுந்து மறைந்தாள்.

மயில்
நடந்ததையெல்லாம் நாரதர் மூலம் அறிந்த சிவபெருமான், சினத்துடன் வீரபத்திரராகப் புறப்பட்டார்.
அப்போது அங்கே உடல் இல்லாமல் உயிர் தாங்கி நின்ற தாட்சாயணியை நோக்கினார். தந்தையின் அவமதிப்பால், தந்தை தந்த உடலையே அழித்த தேவியை பாசத்துடன் பார்த்தார்.

‘‘தேவி, நீ ஒரு மயிலுக்கு அடைக்கலம் தந்து இரக்கப்பட்டதால், நீயும் மயில் உருக்கொண்டு எம்மை பூஜிப்பாயாக. நானும் ஒரு மயிலாகத் துணையாக இருப்பேன்’’ என்று கூறி மறைந்தார்.
உடனே, பார்வதிதேவி மயிலாக மாறினாள். அவள் வந்து இறைவனை பூஜித்த இடம்தான் பிரம்மவனம்.

ஈசனும் ஆண் மயிலாக மாறினார். இருவரும் இணைந்து ஆனந்த நடனம் ஆடினார்கள். மயூர தாண்டவம் _ மயில் நடனம். (இன்றும் துலாமாதம் ஐந்தாம் திருநாளில் ஆனந்த மயூர நடனத்தைக் கண்டு களிக்கலாம்).

அஞ்சல் நாயகி
பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கிற்று. ‘‘பிரம்மா ஸ்தாபித்த இந்த பிரம்மதீர்த்தத்தில் மூழ்கி, சிவலிங்கத்தை பூஜிப்பாயாக’’ என்றது.
அதைக் கேட்ட பார்வதிதேவி, மனமகிழ்வுடன் பிரம்மதீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உரு நீங்கி, தேவியாக சுய உருப் பெற்றாள்.

சிவமயிலும் சிவபிரானாக மாறி, ‘‘என்ன வரம் வேண்டும் தேவி?’’ என்றார்.
அப்போது அம்மை, ‘‘கௌரியாகிய நான் மயில் (மாயூரம்) உருக்கொண்டு பூஜித்ததால், ‘கௌரி மாயூரம்’ என்ற பெயர் இந்த ஊருக்கு வரவேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்படவேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலாமாதத்தில் இங்கே வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்’’ என்று வேண்டினாள்.
‘‘எல்லாம் தந்தேன்’’ என்ற இறைவன், ‘‘ஓடி வந்த மயிலுக்கு ‘அஞ்சேல்’ என்று நீ அபயக்கரம் தந்ததால், ‘அஞ்சல்நாயகி’ என்ற பெயரும் உனக்கு உண்டாகும். வணங்கும் பக்தர்களையும் ‘அஞ்சேல்’ என்று அபயம் தந்து காத்தருள்வாயாக’’ என்று ஆசிர்வதித்தார்.

நன்றி: குமுதம் பக்தி

8 comments:

வீ. எம் said...

நல்ல தகவல்...நன்றி வெங்காயம்
ஒரு மாயவரத்தானை பற்றி இங்கே படித்து பாருங்கள்
http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_18.html

Anonymous said...

The Shows I'm Forced to Watch: Power Rangers Dino Thunder
The Premise: Fuzzy. It appears that three teenagers are the latest recruits in this marketing sca - er, thrilling sequel to the Power Rangers saga.
-Ron the big Cat Trees/b> guy.
The Refined Feline Cat Furniture is found here if you want to buy some.

Anonymous said...

ஆங்கிலத்தில் வந்த மேற்படி (A) படத்தை தமிழில் விமர்சனம் செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

//கணவனைப் போலவே மனைவியும் அந்த சிவபெருமானை வழிபட்டு சிவலிங்கத்தை பூஜித்து, அந்த சிவலிங்கத்துக்குள்ளேயே உட்புகுந்து மறைந்து, சிவபதத்தை அடைந்தாள். அதனால் அந்த லிங்கம், அவளது பெயரால் அனவித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறது.//

பெண்களை இழிவுபடுத்தும் புராணக்கதைகளுக்கு உதாரணம் வேற என்ன வேண்டும்?

வெங்காயரே தொடரட்டும் உமது பணி...

வெங்காயம் said...

வாசித்தோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி!!!

Balamurugan said...

தமிழ்த்தாய் வாழ்த்து விஷயத்துல உணர்ச்சி வசப்பபட்டு நியாயா, நாகரீகமான்னு வசனம் பேசிட்டு சாமியையெல்லாம் கிண்டலடிக்கிறீங்க. சாமியை திட்டுனாத்தான் யாரும் டென்ஷன் ஆக மாட்டாங்கன்னு நல்லா தெரிஞ்சு வைச்சுருக்கிறீர்களே.

வெங்காயம் said...

அய்யா பாலமுருகன்!

மதம் என்ற பெயரில் மனிதர்களை மூடர்களாக்கும் ஆபாசக்கதைகள், அறிவுக்கு எட்டாதவை நிறைய மலிந்துகிடக்கின்றன என்பதை உணர்ந்து நான் இந்துமதத்தைவிட்டு வெளியேறி, பெரியாரின் கொள்கையே சரி என்ற நிலையில் வாழ்ந்து வருபவன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சொல்லிற்கேற்ப, நான் வாசித்த கதைகளை இங்கு பதிந்து வருகிறேன். என்னுடைய பதிவின் இறுதியிலேயே அது எந்த பத்திரிக்கையில் வெளியானது என்பதையும் எழுதிவிடுகிறேன்.

நான் பதிவதை கணினி உபயோகிக்கும் சிலர் மட்டுமே வாசிக்க வாய்ப்புண்டு. ஆனால் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இப்படி ஆபாசமான, அறிவுக்கு எட்டாத கதைகள் வெளிவருகின்றனவே.... அவற்றை நிறுத்துமாறு நீங்கள் ஏன் கடிதம் எழுதக்கூடாது.

Anonymous said...

Aiya vengayam avargale,

what is the mistake you found in Hinduism?Yes,Hinduism has explicit sex stories in it.But why do you hate sex?Can we live without it?Sex is an art and is divine.Ours is a land which gave kamasutra and kajuraho.Hindus worship lingam which is nothing but union of penis and vagina.But have you thought why the people who worship such an explicit sex symbol remain chaste and moralistic?Have you ever wondered as of why in a culture which worships polygamous gods,most of the followers of such gods remain monogamous?

'Sex is a sin' said Jesus.Go to America and Europe to see how that principle is followed by followers of jesus."sex is divine' said hinduism.See how its followers live.

warm regards
chellapa