8.01.2005

ஆன்மீக மலர் (31-07-2005)

ஏழு திரையிட்டு பூஜை நடத்தப்படும் வள்ளலார் குடி கொண்டுள்ள வடலூர் பற்றி கேள்விப்படடிருப்பீர்கள். ஆனால் இரண்டு மூன்று வினாடிகள் மட்டுமே தரிசனம் தந்துவிட்டு திரைக்குள் மறைந்து கொள்ளும் சிவன் சன்னதியைப் பார்க்க வேண்டுமானால், நீங்கள் செல்லவேண்டிய இடம், கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் ஆகும்.....

தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது......

இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான ''பீமருத்ரர்'' திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை.

நன்றி: தினமலர் (ஆன்மீக மலர் 31-07-2005)

1 comment:

வெங்காயம் said...

//VCD அல்லது DVD கிடைக்குமா? //

நன்றி ஆரோக்கியம் உள்ளவரே...

எம்மிடம் இருப்பு இல்லை. ஒருவேளை தினமலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் கிடைக்கக் கூடும்.