ஒழுக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் உதாரணமான அரசியல் கட்சி ப.ஜ.க. மட்டுமே என்று மார்தட்டிய காலம் ஒன்று இருந்தது. சமீப காலமாக அந்த எண்ணம் சரிந்து வருவதை இந்திய மக்கள் அறிவார்கள்.
ஏற்கனவே அத்வாணி அணி, வாஜ்பாய் அணி என்று இருவேறு துருவங்களாக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பிரிந்திருந்தாலும், அத்வாணிய் வாஜ்பாய் இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை, இருவரும் சங் பரிவார் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான் என்று சப்பைக் கட்டுகள் கூறப்பட்டன.
கடந்த ஆண்டு தேர்தலின் போது ஏற்பட்ட அடியிலிருந்து கட்சியை மீட்டுடெடுக்கும் பணியில் ஈடுபட்ட அத்வாணி அவர்கள், அவரைவிட அவரின் எதிரியான வாஜ்பாய் அணிந்திருக்கும் மதச்சார்பின்மை முகமூடியே இந்திய மக்களை கவருவதற்கான சிறந்த வழி என்பதை உணர்ந்து, பாகிஸ்தான் பயணத்தை அதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சோதனை முயற்சியை மேற்கொண்டார். மக்களிடம் நல்ல ஆதரவு இருந்தாலும் பரிவாரங்களின் தலைமைக்கு பதில் சொல்ல முடியாமல், முகமூடியை தற்காலிகமாக கழற்ற முயற்சி செய்த போது, அயோத்தியில் நடைபெற்ற தீவிரவாதம் அவருக்குப் பெரும் பேராய் அமைந்தது.
சலசலப்பெல்லாம் அடங்கிவிட்டது. பா.ஜ.க.வில் இனி கோஷ்டிப்பூசல் இல்லை என்ற நிலையில் இந்தியாவின் ஹிட்லர் மோடியை அவரது கட்சிக்காரர்களே எதிர்க்கத் துவங்க, நீறு பூத்த நெருப்பாய் இருந்த பூசல் இன்று வீதிக்கு வந்துவிட்டது.
மதன்லால் குரானா பா.ஜ.க.வின் சாதாரண தொண்டர் இல்லை. தலைநகர அரசின் முதலமைச்சராக இருந்தவர். ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்தவர். சங்பரிவாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீக்கத்திற்கான காரணம் அவர் எழுதிய இரு கடிதங்கள்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பது இதுதான்...... சீக்கியருக்கெதிரான கலவரத்திற்கான பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சீக்கியர்களிடம் மன்னிப்புக் கேட்டது போல், குசராத்தில் முசுலிம்களுக்கெதிரான கலவரத்திற்கு பொறுப்பேற்று அத்வாணி அவர்கள் முசுலிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
குரானா உண்மையிலேயே மதச்சார்பின்மைவாதியாக மாறிவிட்டாரா? அல்லது அத்வாணியைப் போல் இதுவும் ஒரு நாடகமா? பொறுத்திருந்து பார்ப்போம்.....
என்ன ஆனாலும், இனி சோ போன்றவர்கள் காங்கிரசின் உட்கட்சிப் பூசலை பெரிதுபடுத்த முடியாதென்பது என்னனவோ உண்மை.
8.20.2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
'அத்வாணி'
இருந்தாலும் அத்வானிக்கு ஒரு சுளி ஜாஸ்திதான். அதுவும் உங்க புண்ணியத்துல.
:-)
வரவர ப.ஜ.க.வினர் நீதிமன்றங்களையும் மதிக்கத் துவங்கியுள்ளனர்....
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நல்லடியாரே.... இங்கு சிலர் மூன்று சுழியும் சிலர் இரண்டும் எழுதுகின்றனர். இனி வரும் காலங்களில் திருத்திக் கொள்கிறேன்.
அட நீங்ககூட நம்ம பக்கத்துக்கெல்லாம் வற்ற மாதிரி இருக்கு.... அடிக்கடி வாருங்கள்.
நல்லதொரு அலசல் வெங்காயம்..
Post a Comment