8.12.2005

கவிதை (என்னுடையதல்ல!)

தாதி தூது தீது
தத்தை தூதொத் தாது

பொருள்:
பணிப்பெண்ணிடம் தூது சொல்வது தீமையில் முடியும்.
கிளி தூதை சரிவர சொல்லாது....

என் கல்லூரி நாட்களில் தமிழாசான் அவர்கள், உலகின் எந்த மொழியிலும் காணமுடியாத கவிதை அமைப்பு இது. ஒரு எழுத்தை மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்ற பீடிகையுடன் ஆறு அல்லது எட்டு அடி கவிதையைக் கூறினார். இரண்டு அடி மட்டும் நினைவில் உள்ளது. இணைய நன்பர்கள் எவரேனும் அறிந்தால் பின்னூட்டமிடவும்.

7 comments:

Anonymous said...

a-a

Please give meaning....

வெங்காயம் said...

நன்றி a-a மற்றும் jsri

(நல்லவேளையாக என்னுடையதல்ல! என்று போட்டேன்)

இதுபோன்ற கவிதைகள் வேறு மொழிகளில் உண்டா?

Anonymous said...

சமஸ்கிருதத்தில் உண்டு.

ஏகாக்ஷரி என்று பெயர்

Anonymous said...

kalmegappulavar venba ithu.

ithaippol veru ondru undu

Unknown said...

காளமேகப்புலவரோட இன்னோரு பாட்டு இதுன்னு நினைக்கிறேன். பரீட்சைக்காக சின்ன வயசில உருப்போட்டது இன்னும் நினைவிருக்கு.

காக்கைக்காகா கூகை
கூகைக்காகா காக்கை
கோக்குகூ காக்கைக்கு கொக்கொக்க
கைக்கைக்கு காக்கைக்கு கைக்கைக்காகா.

-L-L-D-a-s-u said...

தமிழின் சிறப்புகளில் ஒன்றைப்பற்றிய தகவலுக்கும், கவிதைகளுக்கும், சுட்டிக்கும் நன்றி ..

வெங்காயம் said...

வாசித்தவர்களுக்கும் பின்னூட்டமிட்டோருக்கும் நன்றி.

a-a,

சமஸ்கிருத கவிதை தெரிந்தால் அதை எழுதலாமே... அல்லது தொடுப்புக் கொடுக்கலாமே...