8.26.2005

கிருஷ்ண ஜெயந்தியும் இயக்குநர் சூர்யாவும்!

`நியூ’ என்ற திரைப்படம் சூர்யா என்பவரின் இயக்ககத்தில் வெளிவந்தது. அப்பட்டமான ஆபாசக் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி இந்தத் திரைப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். தீர்ப்பு வருவதற்குள் திரைப்படம் ஓடி மறைந்து விட்டது என்றாலும் தணிக்கைக் குழுமம் அளித்த சான்றிதழை உயர்நீதிமன்றம், ரத்து செய்ததன் மூலம் ஓர் அதிர்ச்சி வைத்தியத்தைத் தந்துள்ளது.

சினிமாவை ஒரு கலை என்று ஒப்புக் கொள் வதற்கே தயங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவும், இதழ்களும் பச்சையாக சமூகச் சீரழிவை வியாபாரமாக செய்து கொண்டு இருக்கின்றனவோ என்று கருதும் அளவுக்குப் புரையோடி, சமுதாயத்தின் மனப்பான்மையையே முற்றிலும் மாசுபடுத்தும் எல்லையைத் தொட்டு விட்டது.

``சுற்றுச்சூழல் மாசு’’ என்பதில் முதலிடம் வகிப்பது இந்த சினிமாக்களே!
யதார்த்தத்தைத்தானே படம் பிடிக்கிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டும் சில `மேதா விலாசங்கள்’ நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குளியலறையில் மனிதனுக்கு இருக்கும் யதார்த்த உரிமையைப் படம் பிடிப்பார்களா? அதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதனை நாகரிகம் கருதி மற்றவற்றிலும் கடைபிடிப்பதுதான் மனிதன் நாகரிகக் கட்டுக்குள் இருக்கிறான் என்பதற்கு இலக்கணமாகும்.

இந்த ஆபாசம் ஒருபுறம்; மக்களை மடமைச் சாக்கடையில் தள்ளும் வகையில் விஞ்ஞானக் கருவியான சினிமா மூலம் மூட நம்பிக்கை நச்சுக் கிருமிகளைப் பரப்புவது எந்த வகையில் சரியானது?

தணிக்கைக் குழுவில் விஞ்ஞான மனப்பான்மை உள்ள பகுத்தறிவுச் சிந்தனையாளர்களை நியமிக்கவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுள் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று கூறப்படவில்லையா?

`பாபா’க்களும், `அண்ணாமலை’களும், `சந்திரமுகி’களும் அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்கத் தக்கதுதானா? இந்தக் காலகட்டத்திலும் ஆவி, பேய் என்பதெல்லாம் - நாட்டைக் காட்டு விலங் காண்டித்தனத்துக்கு இழுத்துச் செல்லுவதல்லவா?

மனிதனின் மகத்தான அறிவை நாசப்படுத்துபவர்களைவிட மூட நம்பிக்கை நோய்க்கு ஆட்படுத்துபவர்களைவிட கொலையாளிகள், சமூக விரோதிகள் வேறு யாராக இருக்க முடியும்?

இந்து மனப்பான்மை என்பதே ஒரு வகையான கொடூர - மனிதத் தன்மைக்கு விரோதமான நோய்களைப் பரப்பும் சாக்கடையாகும். அதில் தொட்ட இடமெல்லாம் அசிங்கம்தான், ஆபாசம் தான் - அறிவுக் கண்களைக் குருடாக்கும் மூடத்தனம்தான்.

எடுத்துக்காட்டாக இன்றைக்கு `கிருஷ்ண ஜெயந்தி’ கொண்டாடுகிறார்கள். அந்தக் கிருஷ்ணன் எப்படி பிறந்தான் என்றால், மகாவிஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து பிறந்தான் என்கிறார்கள். கேட்பதற்கு எவ்வளவுக் கேவலமாக அறிவுக்கும் பொருத்தமற்றதாக இருக்கிறது.

பெண்களோடு கூடிக் குலவுவது; முத்தமிடுவது, புணர்வது என்பதுதான் இந்தக் கிருஷ்ணக் கடவுளின் வேலை. கிருஷ்ணன் என்கிற இந்த ஆண் கடவுள் நாரதன் என்கிற ஆண் கடவுளோடு புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றான். அவைதான் பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் வருடங்களாகும்.

இதையெல்லாம் சொல்லுவதற்கோ, நம்புவதற்கோ கூச்சப்படாதவர்கள் இந்துத்துவாவாதிகள். இந்து மதச் சிந்தனை என்பதே ஆபாசக் குட்டைதான்!

இன்றைய தினம் பெண் கேலிபற்றிக் கவலைப்படுகிறோம். இதில் ஈடுபடும் ஆண்களைத் தண்டிக்கச் சட்டம் கூட வந்துள்ளது.
இதற்கெல்லாம் வழிகாட்டி இந்து மதத்தின் கிருஷ்ணன் என்கிற கடவுள்தானே. இல்லை என்று மறுக்க முடியுமா? பக்தியின் பெயரால் நடந்தாலும், கலையின் பெயரால் நடந்தாலும் ஆபாசம் ஆபாசம்தானே?

கிருஷ்ணனாகிய இந்த ஆண் கேடி - காலி பிறந்த நாள் என்று கூறி மத்திய - மாநில அரசுகள் விடுமுறையும் விடுகின்றனவே - அரசு சார்பில் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள். இந்த நாட்டில் பெண் கேலி எப்படி ஒழியும்?

அறிவார்ந்த சிந்தனைகள் எல்லா இடங்களிலும் இடம் பெற்றால்தான் நாடு காடாக மாறாமல் தப்பிக்கும் - எச்சரிக்கை!

நன்றி: விடுதலை

3 comments:

Anonymous said...

`பாபா’க்களும், `அண்ணாமலை’களும், `சந்திரமுகி’களும் அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்கத் தக்கதுதானா?

Homer's novels have ghosts and demons.Shakesphere uses witches.can we ban them also?

இந்த ஆபாசம் ஒருபுறம்; மக்களை மடமைச் சாக்கடையில் தள்ளும் வகையில் விஞ்ஞானக் கருவியான சினிமா மூலம் மூட நம்பிக்கை நச்சுக் கிருமிகளைப் பரப்புவது எந்த வகையில் சரியானது?

constitution allow panna 'freedom of speech' appadingara vithathula sariyanathu.

இந்து மனப்பான்மை என்பதே ஒரு வகையான கொடூர - மனிதத் தன்மைக்கு விரோதமான நோய்களைப் பரப்பும் சாக்கடையாகும். அதில் தொட்ட இடமெல்லாம் அசிங்கம்தான், ஆபாசம் தான் - அறிவுக் கண்களைக் குருடாக்கும் மூடத்தனம்தான்.

Thirukuralla kamathu pal kooda sex pathi solluthu.Sex abasam,asingam appadinna nama ellam porandha process sex muliyama than.Appo nama abasam and asingamana process mulamava porandhom?

தணிக்கைக் குழுவில் விஞ்ஞான மனப்பான்மை உள்ள பகுத்தறிவுச் சிந்தனையாளர்களை நியமிக்கவேண்டாமா?

Sciencukkum pakutharivukkum enna sambandham?
விஞ்ஞான மனப்பான்மை உள்ள பகுத்தறிவுச் சிந்தனையாளர்களை-this statement is an oxymoron.

அந்தக் கிருஷ்ணன் எப்படி பிறந்தான் என்றால், மகாவிஷ்ணுவின் மார்பு மயிரிலிருந்து பிறந்தான் என்கிறார்கள்

maarbu mayuirula enna kevalam?Abasam, asingam?

பெண்களோடு கூடிக் குலவுவது; முத்தமிடுவது, புணர்வது என்பதுதான் இந்தக் கிருஷ்ணக் கடவுளின் வேலை.

Ithula enna thappu irukku?Pengalai avar enna karpalichara?Kathal thane pannar.

கிருஷ்ணன் என்கிற இந்த ஆண் கடவுள் நாரதன் என்கிற ஆண் கடவுளோடு புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றான். அவைதான் பிரபவ, விபவ என்று தொடங்கும் தமிழ் வருடங்களாகும்.

Homosexuality thappu appadinu endha madayan sonnan?

இதற்கெல்லாம் வழிகாட்டி இந்து மதத்தின் கிருஷ்ணன் என்கிற கடவுள்தானே. இல்லை என்று மறுக்க முடியுமா?
Krishnan viruppappatta ponnugalai than dav adichan.Avan dav adikkalayenu ethanayo ponnunga engi poirukkanga.Virupamillatha endha ponnayum avan balathkaram pannathillai.
பக்தியின் பெயரால் நடந்தாலும், கலையின் பெயரால் நடந்தாலும் ஆபாசம் ஆபாசம்தானே?
kamathu pal in thirukural enna pannalam?'Mulai' pathi pesara neraya pattukal sangam literaturela varuthu.Enna pannalam?

கிருஷ்ணனாகிய இந்த ஆண் கேடி - காலி பிறந்த நாள் என்று கூறி மத்திய - மாநில அரசுகள் விடுமுறையும் விடுகின்றனவே - அரசு சார்பில் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறார்கள். இந்த நாட்டில் பெண் கேலி எப்படி ஒழியும்?

Krishnan kattina valiala nadandha oliyum.

vanakkam.nanri

அப்துல் குத்தூஸ் said...

விஷம் கலந்துடுச்சின்னு சொல்லாதிங்கய்யா அப்புறம் நிறைய பேருக்கு கோபம் வரும்.

rcthaa said...

anbulla