8.13.2005

கதையை விட தத்துவமே முக்கியம்

* பக்குவப்படாத மாமிசத்தை அப்படியே சாப்பிடுவதற்கு எவனும் விரும்ப மாட்டான். அதைப் பக்குவப்படுத்திய பிறகு தான் சாப்பிடுகிறான். அதுபோல் பெண்களின் உடல் பக்குவப்படாத மாமிசம். அதை மூடி அழகுபடுத்தி விட்டால் தான் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே பெண்களின் அலங்காரங்களில் மயங்கக்கூடாது.

* சிற்றின்பத்தில் உள்ள ஆசையை விலக்குவதை விடப் பேரின்பத்தில் ஆசையை வளர்ப்பதே முக்கியம். ஏனெனில், பேரின்பத்தில் ஆசை வளர வளரச் சிற்றின்பத்தில் உள்ள ஆசை தானே அடங்கிவிடும்.

* மிதமான ஆகாரம், மிதமான நித்திரை, மிதமான பேச்சு, மிதமான உழைப்பு இவைகளுக்கு நியமம் என்று பெயர். நியமம் இல்லாதவனுக்கு யோகம் பலிக்காது. இரு கரைகளினால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ஆறுதான் கடலை நோக்கி செல்ல முடியும். கரை உடைந்த ஆறு கடலை அடைய முடியாமல் சிதறிப் போய் விடும். அதுபோல் நியமத்துடன் கூடியவன் தான் தனது யோகத்தின் லட்சியத்தைப் பெற முடியும். நியமம் இல்லாதவன் யோக மார்க்கத்தில் சிதறிப் போவான்.

* புராணங்களில் தத்துவத்தை தள்ளிவிட்டு கதைகளை மட்டும் படிப்பவர்கள் பழத்தின் சுவையைத் தள்ளிவிட்டுத் தோலை மட்டிலும் சாப்பிடுபவர்களைப் போல் ஆவார்கள். ஆரஞ்சுப்பழத்தின் சாறை பிழிந்து கொண்டு சக்கையை தள்ளிவிடுவது போல் புராணங்களில் தத்துவத்தை உணர்ந்து எடுத்துக் கொண்டு கதைகளை தள்ளி விட வேண்டும்.

* ஒரு மடாதிபதியின் மனதை விட கிருஹஸ்தனின் மனம் தூய்மையாக இருக்கும். ஒரு பண்டிதரின் மனதை விட படிக்காத மூடனின் மனம் தூய்மையாக இருக்கும்.

—கிருஷ்ணப்ரேமி சுவாமி

நன்றி: தினமலர்

1 comment:

Anonymous said...

பெண்களின் உடல் பக்குவப்படாத மாமிசம். அதை மூடி அழகுபடுத்தி விட்டால் தான் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே பெண்களின் அலங்காரங்களில் மயங்கக்கூடாது

malajalam nirambiya matpandamnu paadinanya sithan.Evan maamisamnu thane paadirukkan.

ஒரு மடாதிபதியின் மனதை விட கிருஹஸ்தனின் மனம் தூய்மையாக இருக்கும். ஒரு பண்டிதரின் மனதை விட படிக்காத மூடனின் மனம் தூய்மையாக இருக்கும்.

unmai,unmai.Athanala than ella rishiyum pondatti,kulandhainnu sathi pathiya valdanga.Anusuya,athiri-vasistar arundathi apadinnu kannalam panni kudithanam nadathinaango.Bhramacharyam ellam thevai illai.