8.08.2005

கிருஷ்ண லீலை 1

கிருஷ்ணனின் லீலைகள் எண்ணிலடங்காதவை.

வெண்ணிலவு மின்னிடும் கன்னியர் கண்களில் தன் முகம் கண்டு கோபியர்களுடன் அவன் செய்த லீலை காதல் லீலை. அநீதியை அழிக்க அவன் செய்த லீலை அநீதி சம்ஹார லீலை என லீலைகள் கணக்கில் அடங்காதவை.

கிருஷ்ணருக்கு வெண்ணெய் மீது அளவிட முடியாத ஆசை. ஒவ்வொரு வீடாக சென்று வெண்ணெய் திருடி சாப்பிடுவது அவரது தினசரி பொழுது போக்குளில் ஒன்று.
ஒரு முறை கிருஷ்ணர் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரை உரல் ஒன்றில் கட்டிப் போட்டார் யசோதா. கிருஷ்ணர் அந்த உரலை இழுத்துக்கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அவர் வீட்டுக்கு எதிரே இரண்டு மரங்கள் இருந்தன. அந்த மரத்திற்கு இடையே உரலுடன் கிருஷ்ணர் செல்லும் போது அந்த மரங்களில் உரல் மோதியதில் இரண்டு மரங்களும் உடைந்தன. இரண்டு மரங்களும் உடனே தேவர்களாக மாறின.
அவர்கள் பெயர் நள சகோதரர்கள். அவர்கள் ஒரு சாபம் காரணமாக மரமாக சபிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சாபப்படி விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது அவர்கள் சாபத்தில் இருந்து விமோசனம் அடைவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி அவர்கள் இப்போது சாப விமோசனம் பெற்று கிருஷ்ணரை வணங்கி சென்றனர்.
கிருஷ்ணரின் அவதார நோக்கம் அநீதியை அழிக்க வேண்டும் என்பது.

பூதகி சம்ஹாரம்:

கிருஷ்ணரைக் கொல்ல ஆயர்பாடிக்கு பூதகி என்ற அரக்கியை அனுப்பி வைத்தான் கம்சன். அவள் கிருஷ்ணரை தேடி அயர்பாடியில் சுற்றி வந்தாள். ஒரு முறை நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணரை அவள் தூக்கிச் சென்றுவிட்டாள்.

கிருஷ்ணருடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் பயந்து போய் நந்தகோபனிடம் போய் இந்த விஷயத்தைக் கூறினர். பயந்து போன நந்தகோபன் கிருஷ்ணரைத் தேடி ஓடினார். குழந்தையை பூதகி காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றதாக கிருஷ்ணரின் நண்பர்கள் கூறியதால் காட்டுப்பகுதி நோக்கி ஓடினார் நந்தகோபன். அப்போது ஒரு பெண்ணின் மரண ஓலம் பலக்க கேட்டது.

அந்த பக்கம் நோக்கி ஒடினார் நந்த கோபன். அங்கு பூதகி மரணமடைந்து கிடந்தாள். பூதகி கிருஷ்ணருக்கு தன்னிடமிருந்த விஷப்பாலை ஊட்ட முனைந்த போது அவள் உடலிலிருந்த ரத்தம் அனைத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டார் கிருஷ்ணர்.
அவளை தாக்கி கொன்றும் விட்டார்
. இது பூதகி சம்ஹாரம்.

நன்றி: தட்ஸ் தமிழ்

1 comment:

Anonymous said...

//காஞ்சிப் பெரியவாளின் லீலைகளையும் கொஞ்சம் 'புட்டு புட்டு' வைத்தால் நன்னாருக்கும்.//

வெங்காயரே! (என்ன பெயர் ஐயா இது?)

அணுராதரமனனைத் தொடர்பு கொண்டால் உருப்படியான தகவல்கள் கிடைக்கும். சினி தொடர்பு இருந்தால் சொர்ணமால்யாவிடமும் கேட்கலாம்.