ஆண்டாள் கலியுகம் பிறந்த 98வது ஆண்டில் (நள ஆண்டு) பிறந்தாள். இப்போது கலியுகம் 5106ம் ஆண்டு நடப்பதாக பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்த போது பிறந்தவர்கள் மூவர். ராமன், ராகவேந்திரா, ஆண்டாள் ஆகியோரே அம்மூவர். இவள் ஆடி மாதம் 8ம் தேதி பூர நட்சத்திரத்தில், சிம்ம ராசியில், துலாம் லக்னத்தில், வளர்பிறை பஞ்சமி திதியில், செவ்வாய்க்கிழமை பிறந்தாள். சிம்மராசி பிடிவாத குணம் கொண்டது. ஆண்டாளும் இறைவனை அடைய வேண்டும் என்ற பிடிவாதம் செய்து அவரையே அடைந்தாள். அவள் பிறக்கும் போதே அவளுக்கு ஐந்து வயது என தல வரலாறு குறிப்பிடுகிறது. இந்த வயதுடைய குழந்தையாகத்தான் பெரியாழ்வார் அவளை துளசித் தோட்டத்தில் கண்டெடுத்தார். ஆக இவ்வாண்டு அவளுக்கு 5013ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
நன்றி: தினமலர்
8.03.2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வாங்கய்யா வெங்காயரே,
தெரியாமல் தான் கேட்கிறேன். நீர் என்ன தினமலர் ஏஜண்டா? அது ஒரு நகைச்சுவை நாளிதழ் அப்படின்னு இங்கே நிறைய பேருக்குத் தெரியுமே?
//அவள் பிறக்கும் போதே அவளுக்கு ஐந்து வயது//
Please continue to publish more such 'scientific' news.
Thanks
ithu maathiriyaana vengaayathanaama seithihalukku nandri...ungal vengayaa viyabaaram peruha vaalthuhiren
Post a Comment