8.16.2005

ரஜினி ரசிகர்களே!!

சூப்பர் ஸ்டார் என்ற என் பதிவிற்கு பதிலாக ராஜா ராமதாஸ் (மருத்துவர் அல்ல!) என்பவரின் ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு என்ற பதிவிற்கான எமது பதில்.

நான் ரஜினிக்கு எதிரானவன் அல்ல. ரஜினி ரசிகன் என்ற பெயரில் சிலர் செய்யும் கூத்துக்களுக்குத்தான் எதிரானவன். என்னுடைய பதிவில் நான் ரஜினியைச் சாடி எழுதவில்லை. மாறாக ரசிகர்களைச் சாடியே எழுதியிருக்கிறேன்.

பொதுவாக அவருடைய செயல்கள் சராசரி மனிதனைப்போன்றுதான் இருக்கின்றன. பெங்களூரில் பணிபுரியும் தமிழர்கள் கூட தமிழைத்தான் நேசிப்பார்கள். தங்களுடைய ஊர், மாவட்டம், மாநிலம் என்றுதான் அவர்களுடைய வட்டமும் விரியும். ரஜினியும் அப்படித்தான் செய்கிறார். சராசரி கண்ணோட்டத்தில் இது தவறான காரியம் அன்று. ஆனால் அவருக்கு ஒப்பீடு செய்வதற்கு என் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பயன்படுத்தும் ரசிகர்களின் செயல்களையே தவறு என்கிறேன்.

வாட்டாள் நாகராஜ் தன் குழந்தைகளை ஊட்டியில் படிக்கவைத்திருப்பதால் மட்டும் அவர் தமிழர்களுக்குச் செய்த கொடுமைகளை மானமுள்ள எந்த தமிழனும் மறக்க மாட்டான்.
கார்கில் நிதிக்கு நிதியளித்ததைக் குறிப்பிட்டிருந்தீர்கள். கார்கில் தமிழகத்திற்கு மட்டுமே உரிய பிரச்சனை அல்ல என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை.

ரஜினிக்கு நாம் ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை என்ற உங்கள் வாதம் உப்பிட்டவனுக்குச் செய்யும் துரோகம் என விளங்கிக் கொள்ஞங்கள். தமிழர்கள் அவருடைய திரைப்படங்களை (அது நன்றாக இருந்ததோ இல்லையோ) சென்று பார்த்ததினால்தான் அவர் இந்த நிலையை அடைந்தார். தமிழர்கள் எனக்குறிப்பிடுவதை ரசிகர்களாகிய உங்களையும்தான். நீங்களும் நாமும்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்தோம். நடிக்க வரும்போதே அவர் கொண்டு வந்த பட்டம் அல்ல.

என்னுடைய தருமம் குறித்து கேட்டீர்கள். அவரைப்போல் நான் சம்பாதிப்பவன் அல்லன். வருடத்திற்கு இலட்ச ரூபாய் சம்பாதித்தாலே அதிகம். இருந்தாலும் என்னால் முடிந்த தருமங்களைச் செய்தே வருகிறேன்.

இறுதியாக: உங்களுடைய பதிவுக்கு உங்கள் பதிவிலேயே அனானிமஸாக வந்து, இரு வார்த்தை உங்களையும் அவரையும் திட்டி எழுதியிருக்கலாம். அல்லது கண்ணாடி என்பவர் உங்களது பதிவையே வஞ்சப்புகழ்ச்சியா எழுதியிருப்பது போல் நானும் ஒரு பதிவு இட்டிருக்கலாம். இவ்வளவு பொறுமையாக எழுதக்காரணம் உண்மை நிலையை நீங்கள் உணர வேண்டும் என்பதுதான். ரஜினியின் படத்தைப் பாருங்கள். ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இருக்கிற சாமிகள் போதும்.

9 comments:

Anonymous said...

பொறுக்கிகளுக்கு தாயைக்கூட்டிக் கொடுக்கும் பிள்ளைகள் தான் தமிழ்த் தாய் வாழ்த்தால் எவனையோ புகழ்வார்கள்

Raja said...

30 வருடம் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக் இருக்கும் ரஜினியை பாரட்டி வாழ்த்தி எழுதிய பதிவுக்கு நீங்கள் அவர் எதுவும் சாதிக்க வில்லை எதற்கு வாழத்து என்று கூறினால் அது சரி. எதற்கெடுத்தாலும் கர்நாடாகக்காரன் என சொல்லியதால் தான் அப்படி ஒரு பதிவு எழுத வேண்டியுள்ளது. நானும் ரஜினியை விமர்சிப்பவர்களை அனைவரையும் விமர்சிப்பவன் அல்ல. அதற்காக உங்கள் வெறுப்பினால் சம்பந்தம் இல்லாமல் தவறாக விமர்சிபதை ஏற்றூக் கொள்ள முடியாது.

ஒரு தமிழன் தமிழ் நாட்டை தாண்டி இந்தியாவின் பிரச்சனையான கார்கில் நிதிக்கு கூட நிதி தரலாமா என கேட்க உங்களால் எப்படி முடிந்தது என தெரியவில்லை.

இப்படிக்கும் பெங்களூரில் வாழும் தமிழன். எனக்கு வேலை கொடுத்த பெங்களூரில் என்னை யாரும் பெங்களூருக்கு என்ன செய்தாய் என கேட்க வில்லை.

Raja said...

அப்ப ரஜினிகிட்ட மட்டும் ஏன் கேட்குறீங்க.அவரு நிறைய சம்பாதிக்கிறார் என்ற பொறாமையிலா?

வெங்காயம் said...

//30 வருடம் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக் இருக்கும் ரஜினியை பாரட்டி வாழ்த்தி எழுதிய பதிவுக்கு நீங்கள் அவர் எதுவும் சாதிக்க வில்லை எதற்கு வாழத்து என்று கூறினால் அது சரி. எதற்கெடுத்தாலும் கர்நாடாகக்காரன் என சொல்லியதால் தான் அப்படி ஒரு பதிவு எழுத வேண்டியுள்ளது.//

ராஜா ராமதாஸ் அவர்களே....

ரஜினி சாதித்தார், சாதிக்கவில்லை என்பதல்ல என் வாதம். யார் வேண்டுமானாலும் யாருக்கும் வாழ்த்துச் சொல்லலாம். அது தவறில்லை. ஆனால் வாழ்த்த பயன்படுத்தும் வார்த்தைகள்தான் முக்கியம். என் தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்தின் மகிழ்ச்சியைவிட அவரின் திரையுலக பிரவேசம் மகிழ்வானது என்று கூறிய வார்த்தைகள் தவறு என்பதற்காகவே என் பதிவு.

தமிழ்ப்பணியாற்றிய, ஆற்றிவரும் அறிஞர்களுக்கோ, கவிஞர்களுக்கோ (திருவள்ளுவர் முதல் வலைப்பூக்களில் கவிதை எழுதும் சகவலைப்பதிவர் வரை) எவருக்குமே பயன்படுத்தக் கூடாத, தமிழ்த்தாய் வாழ்த்தை ஒரு நடிகருக்கு பயன்படுத்துவது, தமிழை கேவலப்படுத்துவது இல்லையா? அப்படிப் பயன்படுத்துவர் தனக்குப் பிடித்த பேச்சாளராக தமிழரின் விரோதியின் பெயரைச் சுட்டிக் காட்டியதால்தான், அவரின் தாய்மொழியைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதாயிற்று.

//ஒரு தமிழன் தமிழ் நாட்டை தாண்டி இந்தியாவின் பிரச்சனையான கார்கில் நிதிக்கு கூட நிதி தரலாமா என கேட்க உங்களால் எப்படி முடிந்தது என தெரியவில்லை.//

அய்யோ பாவம்! என்னே அறியாமை? தயவு செய்து நான் எழுதியதையும் நீங்கள் எழுதியதையும் மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

-L-L-D-a-s-u said...

// என் தேசத்திற்கு கிடைத்த சுதந்திரத்தின் மகிழ்ச்சியைவிட அவரின் திரையுலக பிரவேசம் மகிழ்வானது என்று கூறிய வார்த்தைகள் தவறு என்பதற்காகவே என் பதிவு.

தமிழ்ப்பணியாற்றிய, ஆற்றிவரும் அறிஞர்களுக்கோ, கவிஞர்களுக்கோ (திருவள்ளுவர் முதல் வலைப்பூக்களில் கவிதை எழுதும் சகவலைப்பதிவர் வரை) எவருக்குமே பயன்படுத்தக் கூடாத, தமிழ்த்தாய் வாழ்த்தை ஒரு நடிகருக்கு பயன்படுத்துவது, தமிழை கேவலப்படுத்துவது இல்லையா//

அருமை நண்பரே ..

தமிழினத்தின் அழிக்கமுடியாத கேவலமாக இந்த ரசிகர்கள்... முக்கியமாக ரஜினியின் ரசிகரகள் .. எப்போதுதான் திருந்துவார்களோ?

வெங்காயம் said...

--L-L-D-a-s-u--- said...

//தமிழினத்தின் அழிக்கமுடியாத கேவலமாக இந்த ரசிகர்கள்... முக்கியமாக ரஜினியின் ரசிகரகள் .. எப்போதுதான் திருந்துவார்களோ? //

நன்றி தாசு அவர்களே... அடிக்கடி வாருங்கள்.. நிறைய எரிச்சலுடன் செல்லுங்கள்.

(நீங்கள் விவேக் ரசிகரோ?)

Anonymous said...

Americakaran avan countryoda flagla jatti,bra thaichu pottukaran.Neenga ennamo tamil thai valthula rajiniya pugalndathukku endha attam podareenga?Tamil onnum kadavul illai.Athu oru language.Tamil thai valthu onnum punitha mandhiram illai.Athu oru pattu.Tamil thai appadinu yaarum enda kalathulayum irundathu illai.Neengala kaveri arai 'kaveri thai' appadinnum oru languageai 'tamil thai' appadinnum sami panni vechirukkenga.Kadavul illainu solra neenga eppadi tamilai kadavul akkalam?Unga manasula indha meta physical mentality innum marayalai appadinagarathai than indha incident kattuthu.

Tamil thai valthu appadingarathu verum kavithai.Athu onnum sami kudutha punitha mandiram kidayathu.Athai rajinikku use pannakoodathu appadinnu endha sattamum illai.Ithu jananayaka naadu.Yaar venumnalum enna venumnalum pannalam.

Santhosh said...

தம்பி Anonymous ஆம்பிளை சிங்கமே நல்லாதான் சொல்லி இருக்கிங்க சொந்த பேரை சொல்லி இருக்கலாம் இல்ல என்ன பயமா.

//Americakaran avan countryoda flagla jatti,bra thaichu pottukaran.//
நல்லா தான் இருக்கு கேக்க. அமெரிக்கவுல வாரத்துக்கு ஒரு கல்யாணம் பண்ணிகிறாங்க(நாகரிகம் கருதி டிச்ண்டா சொல்லி இருக்கேன்) நமக்கு சரி வருமா?. அமெரிக்கவுல ரசிகர் மன்றமே இல்ல நம்ம அப்படியா?(அனா இப்ப நம்மலல் சில படிச்ச *********** நம்ம நாட்டின் பேரை கெடுக்க அந்த கருமத்தையும் ஆரம்பிச்சிடாங்க).onlineல அவனவன் Rocket விட்டுட்டு இருக்கான் நம்ம ஆள் ரசிகர்மன்றம் ஆரம்பிக்குரனுங்க.

//Tamil thai valthu appadingarathu verum kavithai.Athu onnum sami kudutha punitha mandiram kidayathu//
அப்படி பாத்தா தேசியகீதம் கூடத்தான் ஒரு கவிதை அதையும் use பண்ணலாமே. நிங்க இன்னொரு படி மேல போயி அமெரிக்க தேசிய கீதத்தை ட்ரை பண்ணுங்க உங்க ஷ்டாரு மனசு குளிர்ந்து அவரோட அடுத்த படத்துக்கு first day first ticket குடுப்பாரு போயி பாக்கலாம்.
போங்டா போயி பொழப்ப பாருங்கடா நாட்டை முன்னேத்துர வழிய பாருங்கடா. அவன்னவன் Marsக்கு Rocket விட்டுடு இருக்கான் இவனுங்க கட்டவுட்டுக்கு பால் ஊத்திட்டு குடும்பத்தை நடுத்தெருவுல விட்டுட்டு சுத்துரானுங்க.

Anonymous said...

bharatha matha nnu oruthara adikadi kaamikarangale avanga yaaru?