8.14.2005

தீவிரவாதிகளுக்கு செக்

விமானங்கள் கடத்தப்பட்டால் அவற்றைச் சுட்டுத்தள்ள மத்திய மந்திரி சபை முடிவு

தீவிரவாதிகளால் விமானங்கள் கடத்தப்பட்டால், அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதைவிட, கடத்தப்பட்ட விமானங்களையே சுட்டுத்தள்ள இந்தியா அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இத்தகைய கடத்தல் நாடகங்கள் மேற்கொள்வதை தீவிரவாதிகள் கைவிடக்கூடும் என்று நம்பப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானம் ஒன்று ஆப்கானுக்கு கடத்தப்பட்டு, தீவிரவாதிகளின் நிபந்தனைகளுக்கு இந்தியா அடிபணிந்து அவமானப்பட்டது நினைவிருக்கலாம்.

நன்றி: சன் செய்திகள்

10 comments:

Anonymous said...

அப்ப அந்த விமானத்தில் இருக்கும் பயணிகளின் கதி??????

Anonymous said...

//அப்ப அந்த விமானத்தில் இருக்கும் பயணிகளின் கதி??????//

கோவிந்தா கோவிந்தா

Voice on Wings said...

இது குறித்த ரீடிஃப் செய்திக் குறிப்பு இதோ. பயணிகளைக் காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்றும் தரையிறங்கிய விமானம் மறுபடி பறப்பது தடை செய்யப்படுமென்றும் கூறுகிறார்கள். எனக்கும் 'கோவிந்தா' என்றுதான் தோன்றுகிறது.

வெங்காயம் said...

//அப்ப அந்த விமானத்தில் இருக்கும் பயணிகளின் கதி?????? //

இது முதல் தகவல் மட்டுமே. மேலும் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று நம்புவோம்.

supersubra said...

இது என்னடா அநியாயம். இந்தியாவின் மொத்த விமானம் 500 இருந்தால் 500 தற்கொலை தீவிரவாதிகள் போதுமா மொத்த இந்திய விமானங்களை அழிப்பதற்கு - ?
நம் கையாலேயே நம் கண்ணை குத்துவதற்குத்தான் இந்த சட்டம் பயன்படும்.

Amar said...

இது ஒரு கொள்கை முடிவு.A policy decision.

அதாவது , யார் - யாரை கடத்தி கொண்டு போனாலும் பாரத அரசாங்கம் பேச்சு நடத்தாது.

மிக மிக நல்ல முடிவு , இந்திய நாடு ஒரு soft state என்று என்னும் திவிரவாதிகள் கதி இனி அதோ-கதி.

பி.கு. : வீரப்பன் இருந்து அவன் ராஜ் குமாரை இப்போது கடத்தி கொண்டு போனால் அரசங்கம் பேச்சு நடத்தாது.

இதனால் நன்மையே !
சுதந்திர தின பரிசு இது !

GoI wont give in to Blackmail , in any form , any more !

Amar said...

சேப்'11 போன்ற தாக்குதல் நடந்த்த பின் , அதே போல் நம் நாட்டின் எதாவது ஒரு பெரிய இடத்தில் விமானத்தை மோதினால் ?


Its better to shoot the plane , we the agencies have knowledge that the attack will go about on a 9/11 style , is it not ?

Anonymous said...

ஏனுங்க, தெரியாமத் தான் கேக்குறேன். கடத்தப்பட்ட விமானத்தில் சோனியா அம்மாவோ, கலைஞர் அய்யாவோ இருந்தாலும் சுடுவாங்களா?

Anonymous said...

//ஏனுங்க, தெரியாமத் தான் கேக்குறேன். கடத்தப்பட்ட விமானத்தில் சோனியா அம்மாவோ, கலைஞர் அய்யாவோ இருந்தாலும் சுடுவாங்களா? //

Amma atchila ayyavai suduvanga!!

Ayya atchila ammavai suduvanga!!!

Amma, Ayya namma amma ayya illa....

mela irukkira amma ayya

Pongada....

supersubra said...

சும்மா ஒரு விளையாட்டுக்குத்தான் பல நாள் கழித்து ஒரு பழைய பதிவை முன்னுக்கு கொண்டு வரத்தான் இந்த பின்னூட்டம். யாருக்காவது எரிச்சல் வந்தால் என்னை திட்டுங்கள். இதற்கு வெங்காயம் காரணமில்லை.