தமிழன் மானமிழந்துவிட்டான் என்று தேர்தல் தோல்வியின்போது கருணாநிதி குறிப்பிடுவார். ஆனால் உண்மையிலேயே மானமிழந்த ஈனப்பிறவிகள் சில இருக்கத்தான் செய்கின்றன என்பதை ரஜினி-31 மற்று லகலக போன்ற பதிவுகளை படிக்கும்போது ஏற்படத்தான் செய்கின்றது.
''உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்'' என்று தன் சினிமாக்களில் பாடல்களை வைத்து, அந்த படத்தை வெற்றியடையச் செய்து பணம் சம்பாதிப்பதோடு அவரின் நன்றியும் முடிவுக்கு வந்து விடுகிறது.
தமிழர்களை வேட்டையாடிய கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ்தான் இவருக்குப் பிடித்த பேச்சாளர். அந்த வெறியனின் பேச்சு எப்படி இருக்கும் என்பதை, கர்நாடகாவில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டபோது அங்கிருந்த தமிழர்களையும், அப்போது வெளிவந்த செய்தித்தாள்களையும் படித்துப் பார்த்தால் தெரியும்.
அவரின் தாய்மொழி கன்னடம் என்பதால் கன்னட பேச்சாளரையே பிடிக்கும் என்பது உண்மை. அப்படி அவருக்குப் பிடித்த பேச்சாளர் தமிழர்களுக்கு விரோதமான பேச்சுக்களைப் பேசுபவர் என்பது அவருக்குத் தெரியத்தானே செய்யும். உப்பிட்ட தமிழ் மண்ணுக்கு தன் தாய்மொழியை விட்டுக் கொடுக்க சொல்லவில்லை. குறைந்தபட்சம் தனக்குப் பிடித்த பேச்சாளர் உங்களுடைய விரோதிதான் என்பதையாயவது அவர் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
இந்த நேரத்தில் கர்நாடகாவிலிருந்து வந்த மற்றொரு நடிகரான பிரகாஷ்ராஜையும் நினைத்துப் பார்க்கிறேன். இவர் ஒரு படத்திற்கு பத்து கோடி, பதினைந்து கோடி வாங்கும் சூப்பர் ஸ்டார் இல்லையென்றாலும் உப்பிட்ட தமிழ் மண்ணுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தமிழ் சினிமாவில் முதலீடு செய்வது, பொதுநலச் சேவைகளில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பது, தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்களுக்கு பாராட்டுவிழா நடத்துவது என்று எத்தனையோ விஷயங்களில் முன்னோடியாக இருக்கிறார்.
எனவே தமிழர்களே!! உங்களுக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர்தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று நீங்கள் கருதினால் பிரகாஷ் ராஜ்தான் அதற்கு முழுமையான தகுதி பெற்றவர் என்பதை நினைவு கொள்ளுங்கள்.
8.16.2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Super appu!!!
நம்மளையும் ஒரு பதிவு எழுத வச்சிட்டீஙளே. சரி ஒரு தடவை வந்து பார்துட்டு போங்க
http://parattai.blogspot.com/2005/08/blog-post.html
sila muranpatta karuthukkal enakirundhaalum, ungal katturaiyil pala vishayangal erpudayadhaagavey irukkiradhu
vaazhthukkal vengayam sir
வாசித்தோருக்கும் வாழ்த்தியோருக்கும் நன்றி...
//ஆனால் உண்மையிலேயே மானமிழந்த ஈனப்பிறவிகள் சில இருக்கத்தான் செய்கின்றன என்பதை ரஜினி-31 மற்று லகலக போன்ற பதிவுகளை படிக்கும்போது ஏற்படத்தான் செய்கின்றது.
//
சகவலைப்பதிவரை இப்படி தரம் குறைந்த முறையில் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
We, strongly condemns your article. If you want to know what Mr. Rajinikanth did in 1992, you can refer Mr. Ramki book which would bring lot of surprises to you. Thank you. Balaji Manikandan
enRenRum-anbudan.BALA said...
//சகவலைப்பதிவரை இப்படி தரம் குறைந்த முறையில் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.//
தமிழ்த்தாய் வாழ்த்தை தனி நபர் ஒருவரின் பாராட்டுக்காக உபயோகிக்கும்போது எங்கே சென்றிருந்தீர்கள் பாலா. தாய்க்குரிய வாழ்த்தை தனயனுக்கோ, சகோதரனுக்கோ உபயகோப்படுத்துதல் தவறு என்பது உங்களுக்குத் தெரியாதா? (அவர் தமிழராக இருந்தாலும்)
//ஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் நாள். ஆனால் தமிழ் சினிமா ரசிகன் மட்டும் சற்று அதிகமாக சந்தோசப் படும் நாள்.//
சுதந்திரத்தைக் காட்டிலும், ரஜினியின் சினிமா பிரவேசம்தான் சந்தோஷமான விஷயம் என்று கூறுவோரின் எழுத்துக்கள் உங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது அது தவறானதல்ல என்று நினைத்துக் கொண்டீர்களா?
இதுகுறித்த என்னுடைய மற்றொரு பதிவையும் படித்துப் பாருங்கள்.
http://thamizhinam.blogspot.com/2005/08/blog-post_112420396361907924.html
என் வலி தண்ணி வலி
தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாரி
///
//சகவலைப்பதிவரை இப்படி தரம் குறைந்த முறையில் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.//
தமிழ்த்தாய் வாழ்த்தை தனி நபர் ஒருவரின் பாராட்டுக்காக உபயோகிக்கும்போது எங்கே சென்றிருந்தீர்கள் பாலா///
ஒருவரை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம், ஆனால் வரைமுறை மீறி திட்டமுடியாது
தமிழனை காட்டுமிராண்டி(அதுவும் தான் கன்னட பலிஜ்வார் என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட ஒருவன்) என்று திட்டும் மரபில் இது சகஜமாய் இருக்கலாம்...
Post a Comment